அறுவை சிகிச்சையில் பெண்ணுக்கு பொருத்தப்பட்ட ஆணின் கைகள்: திடீரென கைகள் நிறம் மாறிய அதிசயம்!

 

அறுவை சிகிச்சையில் பெண்ணுக்கு பொருத்தப்பட்ட ஆணின் கைகள்:  திடீரென கைகள்  நிறம் மாறிய அதிசயம்!

21 வயதான ஷ்ரேயா சித்தனகவுடர் என்ற பெண்ணுக்கு கைகளுக்கான மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது.

கேரளா மாநிலம்  கொச்சியின் அம்ரிதா மெடிக்கல் சயின்ஸ் இன்ஸ்டிட்யூட்டில் புனேவை 21 வயதான ஷ்ரேயா சித்தனகவுடர் என்ற பெண்ணுக்கு கைகளுக்கான மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது.

ttn

 விபத்து ஒன்றில் இரண்டு கைகளையும் இழந்த அந்த பெண்ணுக்கு 2017ம் ஆண்டு மரணமுற்ற கேரள இளைஞரின் கைகள் தான்  பொருத்தப்பட்டது. இது ஆசியாவில் நடைபெற்ற முதல் inter-gender hand transplant ஆகும்.அறுவை சிகிச்சைக்கு பிறகு ஷ்ரேயா சித்தனகவுடர் சிறப்பாகவே எழுதி வருகிறார். 

ttn

இதில் ஆச்சரியம் என்னவென்றால் ஷ்ரேயாவுக்கு பொருத்தப்பட்ட கை  கருப்பு நிறத்திலிருந்தது. இருப்பினும் நாளடைவில் அந்த கை  அவரின் தோல் நிறத்திற்கு ஏற்ப மாறியுள்ளது. 

ttn

இதுகுறித்து கூறியுள்ள மருத்துவர்கள், எர்ணாகுளம் சேர்ந்த கல்லூரி   மாணவர் சச்சின், சாலை விபத்து ஒன்றில் மூளைச்சாவு அடைந்ததைத் தொடர்ந்து அவருடைய கைகளை தானம் செய்ய அவரது குடும்பத்தினர் முடிவு செய்தனர். இருவரின் இரத்தமும் ஒத்துப்போகவே சச்சின் கைகள் ஷ்ரேயாவிற்கு ஆகஸ்ட் 9, 2017ம் ஆண்டு பொருத்தப்பட்டது. இதுவரை கைகளின் நிறங்கள் மற்றும் ஷேப் மாறியதற்கான ஆதாரங்களே இல்லை. இது போன்று நிகழ்வது இதுவே முதல்முறை. அறிவியல் துறைசார் இதழ் ஒன்றில் இரண்டு பேரின் கேஸ்களை பதிப்பிட உள்ளோம். அது அவ்வளவு எளிதானதல்ல’ என்று கூறியுள்ளார்.