அறிமுகமான முதல் நாளே விற்பனையில் சக்கைப்போடு போடும் சாம்சங் கேலக்ஸி எம்10,  சாம்சங் கேலக்ஸி எம்20!  விலை தெரியுமா?

அறிமுகமான முதல் நாளே விற்பனையில் சக்கைப்போடு போடும் சாம்சங் கேலக்ஸி எம்10,  சாம்சங் கேலக்ஸி எம்20!  விலை தெரியுமா?

சாம்சங் நிறுவனத்தின் எம் சீரிஸ் வரிசையில் சாம்சங் கேலக்ஸி எம்10 மற்றும் சாம்சங் கேலக்ஸி எம்20 என்ற இரண்டு புதிய மாடல் ஸ்மார்ட்போன்களை அண்மையில் அறிமுகம் செய்திருந்தது. இந்த புதிய ஸ்மார்ட்போன்களின் முதல் நாள் விற்பனையை சாம்சங் நிறுவனம் இன்று துவங்கியது.

அமேசான் விற்பனை
அமேசான் தளம் மற்றும் சாம்சங் நிறுவனத்தின் ஈ-ஷாப் தளத்தில் இன்று 12 முதல், சாம்சங் கேலக்ஸி எம்10 மற்றும் சாம்சங் கேலக்ஸி எம்20 ஸ்மார்ட்போன்களின் முதற்கட்ட விற்பனையை சாம்சங் நிறுவனம் துவங்கியுள்ளது. 

சாம்சங் கேலக்ஸி எம்10
சாம்சங் கேலக்ஸி எம்10 ஸ்மார்ட்போன் இன் 2 ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி உள்ளடக்கச் சேமிப்பு வேரியண்ட் வெறும் ரூ.7,990 என்ற விலையிலும் மற்றும் அதன் 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி உள்ளடக்கச் சேமிப்பு வேரியண்ட் ரூ.8,990 என்ற விலையில் விற்பனைக்கு கிடைகிறது.

samusung galaxy m 10

சாம்சங் கேலக்ஸி எம்20
சாம்சங் கேலக்ஸி எம்20 ஸ்மார்ட்போன் இன் துவக்க மாடல் 3ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி உள்ளடக்கச் சேமிப்பு வேரியண்ட் ரூ.10,990 என்ற விலையிலும், அதன் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்ளடக்கச் சேமிப்பு வேரியண்ட் ரூ.12,990 என்ற விலையில் விற்பனைக்குக் கிடைக்கிறது.

samusung galaxy m 20

அறிமுக சலுகை
துவக்க விற்பனையை முன்னிட்டு அமேசான், சாம்சங் கேலக்ஸி எம்10 மற்றும் சாம்சங் கேலக்ஸி எம்20 ஸ்மார்ட்போன்களுக்கு சேதம் பாதுகாப்பு திட்டத்துடன் வட்டியில்லா தவணை திட்டத்தையும் அறிவித்துள்ளது. 
கூடுதலாக,ஜியோ கேலக்ஸி கிளப் ஆபர் (அமேசான் இந்தியா மற்றும் சாம்சங் இ-ஷாப் இரண்டிலும் கிடைக்கும்), ரூ.3,110 ரூபாயில் கூடுதல் தரவு வடிவத்தில் ஜியோ சந்தாதாரர்களுக்கு ரூ.198 மற்றும் ரூ.299 ப்ரீபெய்ட் திட்டத்துடன் கேலக்ஸி எம்10 அல்லது கேலக்ஸி எம்20 ஸ்மார்ட்போனுடன் வழங்கப்படுகிறது.