அறிஞர் அண்ணாவின் 50வது நினைவு தினம்: மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதி பேரணி!

 

அறிஞர் அண்ணாவின் 50வது நினைவு தினம்: மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதி பேரணி!

50 ஆண்டு கால திராவிட ஆட்சிக்கு அடித்தளமிட்ட பேரறிஞர் அண்ணா 50வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

சென்னை: 50 ஆண்டு கால திராவிட ஆட்சிக்கு அடித்தளமிட்ட பேரறிஞர் அண்ணா 50வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

பெரியாரின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு நீதிக்கட்சியில் இணைந்து சமூக பங்களிப்பை இந்த மாநிலத்திற்கு அளித்தார் அண்ணா. தமிழும் ஆங்கிலத்திலும் சிறப்பாக சொற்பொழிவாற்றும் திறன் கொண்ட அண்ணாவின் பேச்சுக்கு மயங்கி கழகத்தில் இணைந்தவர்கள் எத்தனையோ பேர் என்றாலும் மிகையாது.இந்தி திணிப்பிற்கு எதிரான போராட்டத்தில் மிகவும் தீவிரமாக ஈடுபட்டதின் விளைவாக மக்கள் மத்தியில் நிரந்தர தலைவராக உருவெடுத்த பேரறிஞர் அண்ணாவின் ஐம்பதாம் ஆண்டு நினைவு தினம் இன்று. 

anna

இந்நிலையில் பேரறிஞர் அண்ணாவின் நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் இருந்து காமராஜர் சாலையில் உள்ள அண்ணா நினைவிடம் வரை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதி பேரணி நடைபெற்றது.

dmk

பேரணியில் திமுக பொருளாளர் துரைமுருகன் முதன்மைச் செயலாளர் டி.ஆர்.பாலு, கனிமொழி அமைப்புச் செயலாளர்கள் ஆர்.எஸ்.பாரதி, வி.பி.துரைசாமி உள்ளிட்ட திமுகவின் 19 அணிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் பங்கேற்னர்.

anna

இதையடுத்து அண்ணாவின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்திய திமுக தலைவர் முக ஸ்டாலின், தொடர்ந்து கலைஞர்  கருணாநிதி நினைவிடத்திலும் மரியாதை செலுத்தியது  குறிப்பிடத்தக்கது.