அறம் 2 படத்தில் நயன்தாராவுக்குப் பதில் நானா? பிரபல நடிகை விளக்கம்! 

 

அறம் 2 படத்தில் நயன்தாராவுக்குப் பதில் நானா? பிரபல நடிகை விளக்கம்! 

தமிழ் சினிமாவில் டாப் நடிகையாக வலம் வருபவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா.

தமிழ் சினிமாவில் டாப் நடிகையாக வலம் வருபவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. மற்ற நடிகை போல் கிடைக்கும் படத்தில் எல்லாம் நடிக்காமல் கதாபாத்திரத்திற்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்கும் படத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.  

அந்த வகையில் இவரது நடிப்பில் கடந்த 2017ம் ஆண்டு வெளியான திரைப்படம் அறம். ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தைகளை மையமாக கொண்டு வெளியான இந்த படம் மாபெரும் வெற்றி அடைந்தது. மேலும் அந்த படம் ஏற்படுத்திய தாகத்தையும் அவ்வளவு எளிதில் யாரும் மறந்து விட முடியாது. 

samantha

இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் தொடங்கவுள்ளது. அதில் நயன்தாராவுக்குப் பதில் நடிகை சமந்தா நடிக்க போவதாகச் செய்தி வெளியானது. இது குறித்து விளக்கமளித்த சமந்தா, ‘நான் இந்த படத்திலும் நடிக்க வில்லை, இது யாரோ கிளப்பி விட்ட வதந்தி’ என்றார். மேலும் சமந்தா அந்த படத்தின் இயக்குநர் கோபி இயக்கவுள்ள புது படத்தில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.