அர்ஜுனனின் அம்பில் அணு ஆயுதம் இருந்தது! – மேற்கு வங்க ஆளுநர் சொல்கிறார்

 

அர்ஜுனனின் அம்பில் அணு ஆயுதம் இருந்தது! – மேற்கு வங்க ஆளுநர் சொல்கிறார்

ராமாயண காலத்திலேயே பறக்கும் விமானங்கள் இருந்ததாகவும், மகாபாரத அர்ஜுனனின் அம்பில் அணு ஆயுதம் இருந்ததாகவும் மேற்கு வங்க ஆளுநர் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராமாயண காலத்திலேயே பறக்கும் விமானங்கள் இருந்ததாகவும், மகாபாரத அர்ஜுனனின் அம்பில் அணு ஆயுதம் இருந்ததாகவும் மேற்கு வங்க ஆளுநர் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

jadeep

ராமாயணம் மற்றும் மகாபாரதம் இந்தியாவின் இதிகாசங்கள் ஆகும். மகாபாரத காலத்தில் இன்டர்நெட் இருந்தது என்று திரிபுரா பா.ஜ.க முதல்வர் முன்பு கூறியிருந்தார். இந்த நிலையில், அறிவியல் கண்காட்சி ஒன்றில் மேற்கு வங்க ஆளுநர் ஜகதீப் தங்கர் பேச்சு அறிவியலாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. கொல்கத்தாவில் அறிவியல் மற்றும் பொறியியல் கண்காட்சி நடந்தது. இதை மேற்கு வங்க ஆளுநர் ஜகதீப் தங்கர் தொடங்கிவைத்துப் பேசினார்.

jagadeep

அப்போது அவர், “1910 அல்லது 1911ல் தான் விமானங்கள் மனிதனால் கண்டுபிடிக்கப்பட்டன. ஆனால், ராமாயண காலத்திலேயே பறக்கும் தேர்கள் இருந்தன. மகாபாரத காலத்தில் போர் களத்தில் இல்லாத சஞ்சயன் என்ன நிகழ்ந்துகொண்டிருக்கிறது என்று பார்த்து கூறினான். அர்ஜுனனின் அம்பில் அணு ஆயுதம் இருந்து. எனவே, உலகம் இந்தியாவைப் புறக்கணிக்க முடியாது” என்றார்.

jagadeep

மேற்கு வங்க ஆளுநரின் பேச்சு அறிவியல் அறிஞர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. வங்க விஞ்ஞானி பிகாஷ் சின்ஹா மேற்கு வங்க ஆளுநரின் பேச்சை மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார். “ஆளுநரின் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளது என்று நினைக்கிறேன். தங்கள் பேச்சுக்கு ராமாயணம் மற்றும் மகாபாரதத்தில் உள்ளது என்று இதுபோன்ற நபர்கள் ஆதாரம் காட்டும்போது ஒரு விஞ்ஞானியாகக் கோபம் வருகிறது. இதுபோன்ற பதவியில் உள்ளவர்கள் அபத்தமாகப் பேசக் கூடாது. என்ன பேசுகிறோம் என்பதை இவர்கள் உணர்ந்து பேச வேண்டும். இவர்களுக்கு யாராவது ஆலோசனை வழங்க வேண்டும்” என்றார்.