அரை மணி நேரத்தில் அயோத்தி வழக்கில் தீர்ப்பு! இந்திய-நேபாள எல்லை மூடல்

 

அரை மணி நேரத்தில் அயோத்தி வழக்கில் தீர்ப்பு! இந்திய-நேபாள எல்லை மூடல்

அயோத்தி தீர்ப்பு இன்று வர உள்ளநிலையில், முன்எச்சரிக்கை நடவடிக்கையாக இந்திய-நேபாள எல்லையை உத்தர பிரதேச அரசு சீல் வைத்துள்ளது.

அயோத்தி தீர்ப்பால் எந்தவொரு அசம்பாவித சம்பவங்களும் நடந்து விடக் கூடாது என்பதில் அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களும் உறுதியாக உள்ளன. அதற்காக பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. குறிப்பாக அயோத்தி அமைந்துள்ள உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு பாதுகாப்பு விஷயத்தில் மிகவும் தீவிரமாக உள்ளது. 

யோகி ஆதித்யநாத்

உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் அம்மாநில உயர் அதிகாரிகள் சந்திப்பு நடைபெற்றது. அந்த சந்திப்பில் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது முன்எச்சரிக்கை நடவடிக்கையாக இந்தியா-நேபாள எல்லையை சீல் வைக்க முடிவு எடுக்கப்பட்டது. இதனையடுத்து இந்திய-நேபாள எல்லை சீல் வைக்கப்பட்டது. மேலும் அந்த எல்லை பகுதியில் முறையான அடையாள ஆவணங்கள் இல்லாத நபர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்றம்

அயோத்தி வழக்கில் தீர்ப்பு எப்படி வந்தாலும் அதனை ஏற்றுக் கொள்ள வேண்டும். நல்லிணக்கம் மற்றும் அமைதியை பராமரிக்க வேண்டும் என அனைத்து மாநில முதல்வர்களும் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். அயோத்தி வழக்கு தீர்ப்பு காரணமாக உச்ச நீதிமன்ற வளாகம் மிகவும் பரபரப்பாக காணப்படுகிறது