அரையிறுதியில் விளையாடாமலேயே  இறுதிச் சுற்றுக்கு செல்லும் இந்தியா | சந்தோஷமான விஷயம்

 

அரையிறுதியில் விளையாடாமலேயே  இறுதிச் சுற்றுக்கு செல்லும் இந்தியா | சந்தோஷமான விஷயம்

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில், அரைஇறுதியில் நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது இந்தியா. இருப்பினும், நாளை நடைபெற உள்ள அரையிறுதி போட்டியில், விளையாடாமலே இறுதி போட்டிக்கு செல்லும் வாய்ப்பு இந்திய அணிக்கு பிரகாசமாக இருப்பதாக வெளியான தகவல் இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடையே பெருத்த சந்தோஷத்தை ஏற்படுத்தியுள்ளது. 

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில், அரைஇறுதியில் நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது இந்தியா. இருப்பினும், நாளை நடைபெற உள்ள அரையிறுதி போட்டியில், விளையாடாமலே இறுதி போட்டிக்கு செல்லும் வாய்ப்பு இந்திய அணிக்கு பிரகாசமாக இருப்பதாக வெளியான தகவல் இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடையே பெருத்த சந்தோஷத்தை ஏற்படுத்தியுள்ளது. 

india team
இந்த ஆண்டு, இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை போட்டி தான் வரலாற்றிலேயே, மழையால் அதிக ஆட்டங்கள் நிறுத்தப்பட்டிருக்கும் உலகக் கோப்பை போட்டியாக பதிவாகியிருக்கிறது. இதுவரையில் நடந்து முடிந்துள்ள 45 ஆட்டங்களில் ஏழு போட்டிகள்  மோசமான வானிலையாலும், மழையாலும் பாதிக்கப்பட்டிருக்கிறது. போட்டியின் சமயத்தில் மழையின் குறுக்கீட்டால், மூன்று போட்டிகள் டக்வொர்த் லீவிஸ் முறையில் முடிக்கப்பட்டன.
இந்நிலையில், நாளை அரையிறுதி போட்டி நடைபெறும் மான்செஸ்டரில், வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் வானிலை அறிக்கை தெரிவித்துள்ளது. அப்படி நாளை மழையின் குறுக்கீடு இருந்தால் ஏற்கெனவே லீக் சுற்றுகளில் இந்தியா – நியூசிலாந்துக்கு இடையேயான போட்டி நிறுத்தப்பட்டது போல் நாளையும் நடக்க வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன. ஆனால் அந்த போட்டியைப் போல், இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி பகிர்ந்தளிக்கப்படாது. ஏனெனில், பிற போட்டிகளைப் போல் இல்லாமல் அரைஇறுதி அல்லது இறுதி போட்டிகளின் சமயத்தில் மழையின் குறுக்கீடு இருந்தால் அந்த குறிப்பிட்ட போட்டியை மற்றொரு நாள் தள்ளி வைக்கலாம் என்பது விதியாக வகுக்கப்பட்டிருக்கிறது. எனவே, நாளைய ஆட்டம் மழையின் குறுக்கீட்டால் ரத்து செய்யப்பட்டால், இந்தியா – நியூசிலாந்து போட்டி ஜூலை 10ம் தேதி தள்ளி வைக்கப்படும். 
அப்படி ஜூலை 10ம் தேதி தள்ளி வைக்கப்படும் பட்சத்தில், ஜூலை 10ஆம் தேதி வானிலை மேலும் மோசமாக இருக்கும் என்று வானிலை மையம் கூறியுள்ளது. அன்றும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், நிச்சயமாக ஜூலை 10ம் தேதியன்று மதிய வேலையில் மழை பொழியும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அப்படி

india

ஜூலை 10ஆம் தேதியும் மழையால் போட்டி நிறுத்தப்பட்டால், இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளிகள் வழங்கப்பட்டு, புள்ளிகளின் அடிப்படையில் முன்னிலையில் இருக்கும் அணி இறுதிப் போட்டிக்குள் நுழையும். தற்போது, புள்ளிப்பட்டியலில் நியூசிலாந்தை விட இந்தியா நான்கு புள்ளிகள் அதிகம் பெற்று 15 புள்ளிகளோடு இருப்பதால் லார்ட்ஸில் நடைபெறும் இறுதி ஆட்டத்துக்கு இந்திய அணி நேரடியாக தகுதி பெறும். எப்படியிருந்தாலும், இறுதி போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியாவுடன் மோத வேண்டியிருக்கும் என்கிறார்கள் கிரிக்கெட் ஆர்வலர்கள்.