அரைமணி நேரத்தில் ஆட்சியை மாற்ற நாங்க என்ன குமாரசாமியா? இனி திமுகவுக்கு சாவுமணி தான்… அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

 

அரைமணி நேரத்தில் ஆட்சியை மாற்ற நாங்க என்ன குமாரசாமியா? இனி திமுகவுக்கு சாவுமணி தான்… அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

அரைமணி நேரத்தில் ஆட்சியை மாற்றலாம் என நினைப்பதற்கு நாங்கள் என்ன குமாரசாமியா? நாங்கள் நினைத்தால் அரசியலில் இருந்து ஸ்டாலினை வெளியேற்ற முடியும் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

அரைமணி நேரத்தில் ஆட்சியை மாற்றலாம் என நினைப்பதற்கு நாங்கள் என்ன குமாரசாமியா? நாங்கள் நினைத்தால் அரசியலில் இருந்து ஸ்டாலினை வெளியேற்ற முடியும் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

வேலூர் மக்களவை தேர்தல் பரப்புரை கூட்டத்தில் பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, “நடந்து முடிந்த தேர்தலில் திமுக கூட்டணி வாய்ப்பு இல்லாத வாக்குறுதி கொடுத்து ஏமாற்றினர். மிட்டாய் கொடுப்பது போல் ஸ்டாலின் ஏமாற்றியுள்ளார்.

நாங்கள் ஏமாற்றவில்லை என ஸ்டாலின் பேசுவது நகைப்புக்குரியது. முதல்வர் பழனிச்சாமி உண்மை வாக்குறுதி அளித்தார். டெல்லியில் பழனிச்சாமி ஆதரித்த பா.ஜ.க தான் மீண்டும் ஆட்சி அமைத்தது. ஆட்சி அமைப்பதற்கான ஜாதக பொருத்தம் ஸ்டாலினுக்கு இல்லை. சொந்த அண்ணன் அழகிரியை காட்டிக்கொடுத்தவர் ஸ்டாலின். அழகிரியை தள்ளிவிட்டு மேல வந்தவர் தான் ஸ்டாலின். எதிர்க்கட்சி தலைவராக இருந்தாலும் சட்டையை கிழித்து விட்டு தான் பேரவையில் இருப்பார். 2 ஆயிரம் ரூபாய் சிறப்பு நிதி வழங்க அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது. இதை தடுக்க ஸ்டாலின் நினைக்கிறார். திமுகவில் வாரிசு அரசியலுக்கு தான் சீட் கொடுத்துள்ளனர். கருணாநிதி, ஸ்டாலின் என பின்னர் உதயநிதி வந்துள்ளார். 

திமுகவுக்கு இனி வளர்ச்சி இருக்காது. சட்டம் ஒழுங்கு சரியில்லை என்றால் ஸ்டாலின் நடைபயணம் சென்று வாக்கு சேகரிக்க முடியுமா ? திமுக ஆட்சியில் தான் சட்டம் ஒழுங்கு சரியில்லை. துரைமுருகன் வேலூர் மக்களுக்கு எதுவும் செய்யவில்லை. ஜெ மடிக்கணினி, சைக்கிள், தாலிக்கு தங்கம் என மக்களுக்கு வழங்கினார். கருணாநிதி மகனுக்கு இவ்வளவு சொத்து எப்படி வந்தது. அதிமுக ஆட்சியை கலைப்பதாக ஸ்டாலின் கூறுகிறார். அரை மணி நேரத்தில் ஆட்சியை கலைக்க நாங்கள் என்ன குமாரசாமியா ? 

நாங்கள் நினைத்தால் அரசியலில் இருந்து ஸ்டாலினை வெளியேற்ற முடியும். முதல்வர் பழனிச்சாமி உத்தரவிட்டால் திமுகவுக்கு சாவு மணி அடித்துவிடுவோம். அதிமுக இயக்கத்தில் அனைவரும் தளபதிகள். உதயநிதி என்ன தியாகம் செய்தார். நயன்தாரா உடன் சினிமா மட்டும் தான் நடித்தார். கடந்த 2011, 2016 என இரண்டு தேர்தலிலும் அழுது தான் துரைமுருகன் மக்களிடம் வாக்கு கேட்டார்” என்று கூறினார்.