அரேபியாவில் இருபது கோடி லாட்டரி பரிசு பெற்ற 8 மலையாளிகள்.

வினீஷ் பாலன், மோகன்குமார் சந்திர தாஸ்,பி.வி அருண்தாஸ்,ஷியாம் சுந்தர்,சசிதரன் லஞ்சித்,சுரேஷ் அரயாட்,பாஸ்கரன் ரவீஷ்,ஜித்து பேபி என்கிற எட்டுப்பேரையும் இணைத்தது மோகன்குமார்தான்.கேரளத்தில் கோட்டையம், மலப்புறம், கொச்சி,ஆலப்புழா, பாலக்காடு, நெடுமஞ்சேரி என வெவ்வேறு பகுதியில் இருந்து சவுதிக்கு வந்த இவர்கள் அனைவரும் பணியாற்றுவது ஒரே நிறுவனத்தின் வெவ்வேறு கிளைகளில்.அந்த நிறுவத்தில் கடந்த 9 மாதமாக பணியாற்றும் மோகன் குமார் இவரை எல்லாம் ஒரு குழுவாக்கி இருக்கிறார். 

அந்த லாட்டரி சீட்டின் விலை 530 திர்ஹாம். நம்ம ஊர் காசுக்கு 10 ஆயிரத்து 600 ரூபாய்.எட்டு மலையாளி நண்பர்கள் கூட்டணி அமைத்து அதை வாங்கி 19 கோடியே 82 லட்சம் ரூபாய் முதல் பரிசை வென்று இருக்கிறார்கள்.

வினீஷ் பாலன், மோகன்குமார் சந்திர தாஸ்,பி.வி அருண்தாஸ்,ஷியாம் சுந்தர்,சசிதரன் லஞ்சித்,சுரேஷ் அரயாட்,பாஸ்கரன் ரவீஷ்,ஜித்து பேபி என்கிற எட்டுப்பேரையும் இணைத்தது மோகன்குமார்தான்.கேரளத்தில் கோட்டையம், மலப்புறம், கொச்சி,ஆலப்புழா, பாலக்காடு, நெடுமஞ்சேரி என வெவ்வேறு பகுதியில் இருந்து சவுதிக்கு வந்த இவர்கள் அனைவரும் பணியாற்றுவது ஒரே நிறுவனத்தின் வெவ்வேறு கிளைகளில்.அந்த நிறுவத்தில் கடந்த 9 மாதமாக பணியாற்றும் மோகன் குமார் இவரை எல்லாம் ஒரு குழுவாக்கி இருக்கிறார். 

இதற்கு முன்பும் இதே லாட்டரிச் சீட்டை இரண்டு முறை வாங்கி ஏமாந்து இருக்கின்றனர்.இப்போது மகிழ்ச்சியில் திக்குமுக்காடி கொண்டு மோகன் குமாரும் நண்பர்களும் இவ்வளவு பணத்தை என்ன செய்வது என்று இன்னும் முடிவு  செய்யவில்லை என்கிறார்கள்.