‘அருவி’ நாயகியின் கிளாமர் போட்டோஷூட் : திட்டி தீர்க்கும் ரசிகர்கள்!

 

‘அருவி’ நாயகியின் கிளாமர்  போட்டோஷூட் : திட்டி தீர்க்கும் ரசிகர்கள்!

ஏற்கனவே நடிகர் அஜித்துடன் இணைந்து ‘என்னை அறிந்தால்’ உள்ளிட்ட சில படங்களில் துணை நடிகையாக நடித்திருந்தார்.

தமிழ் சினிமாவில் 2017ம் ஆண்டில் வெளியான பல திரைப்படங்களில் ஒரு முக்கிய பங்கு வகித்த  படம் என்றால் அது அருவி என்றே சொல்லலாம். கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்ட இப்படத்தின் மூலம்  நாயகியாக அறிமுகமானவர் நடிகை அதிதி பாலன். இவர் ஏற்கனவே நடிகர் அஜித்துடன் இணைந்து ‘என்னை அறிந்தால்’ உள்ளிட்ட சில படங்களில் துணை நடிகையாக நடித்திருந்தார்.

aditi

மேலும் அருவி திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து பல படங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்தது. பல இயக்குநர்கள் இவரை தேடி சென்று கதை கூறிய போதிலும், தன்னுடைய மனதிற்கு பிடித்த கதையில் தான் நடிப்பேன் என உறுதியாக இருந்தார்.

aditi

தற்போது சந்தோஷ் சிவன் இயக்கத்தில் ”ஜாக் அண்ட் ஜில்” என பெயரிடப்பட்டுள்ள மலையாளத்தில் கமிட் ஆகியுள்ளார். இதுதவிர அவர் கைவசம் வேறு படங்கள் ஏதுமில்லை.

aditi

இந்நிலையில்  நடிகை அதிதி பாலன் மஞ்சள் நிற சேலையில் கவர்ச்சிகரமாகப் போட்டோ  எடுத்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். படவாய்ப்புக்காக அதிதி புது ட்ராக்கில்  செல்ல ஆரம்பித்துள்ளார்.  இதைக்கண்ட நெட்டிசன்கள், இதுபோன்ற போஸ்ட்டுகளை போடாதீங்க என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.