‘அருவி’ இயக்குநருக்கு வாய்ப்பு கொடுத்த சிவகார்த்திகேயன்!

 

‘அருவி’ இயக்குநருக்கு வாய்ப்பு கொடுத்த சிவகார்த்திகேயன்!

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த ‘மிஸ்டர்  லோக்கல்’ திரைப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களைப் பெற்று, சிவகார்த்திகேயனுக்கு மிகப் பெரிய சறுக்கலை உருவாக்கியிருக்கிறது.

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த ‘மிஸ்டர்  லோக்கல்’ திரைப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களைப் பெற்று, சிவகார்த்திகேயனுக்கு மிகப் பெரிய சறுக்கலை உருவாக்கியிருக்கிறது.

siva

 இந்த படத்தை தொடர்ந்து, இயக்குனர் பாண்டி ராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன்.  மேலும்  பாரதிராஜா, சமுத்திரக்கனி உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இந்த படத்தை தொடர்ந்து இயக்குனர் ஆர்.ரவிக்குமார் இயக்கத்திலும், விக்னேஷ் சிவன் இயக்கத்திலும் நடிக்க உள்ளார்.

siva

நடிப்பில் தொடர் தோல்விகளை சந்தித்து வந்தாலும், தயாரிப்பாளராக வெற்றிக்கொடி நாட்டியுள்ளார் சிவகார்த்திகேயன். இவரது  தயாரிப்பில் வெளியான ‘கனா’ திரைப்படம் ரசிகர்களின் மிகப்பெரிய ஆதரவோடு வெற்றி பெற்றது.  இதனைத் தொடர்ந்து இரண்டாவதாக, ‘நெஞ்சம் முண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா’ என எம்ஜிஆரின் பாடல் வரிகளை தலைப்பாக கொண்ட  படத்தினை தயாரித்திருக்கிறார். இந்நிலையில் சிவகார்த்திகேயனின் அடுத்த தயாரிப்பில் உருவாகும் படத்தை ‘அருவி’ படத்தை இயக்கிய அருண்குமார் இயக்குவார் என்று இன்று அறிவித்திருக்கிறார்.  தான் நடித்த படங்களில் தொடர்ந்து ஹாட்ரிக் ஹிட் அடித்த சிவகார்த்திகேயன் தயாரிப்பிலும் ஹாட்ரிக் வெற்றியைப் பெறுவார் என்கிறார்கள்.