அருண் விஜய் படத்தில் இணைந்த பிரபல நடிகையின் தங்கை!

 

அருண் விஜய் படத்தில் இணைந்த பிரபல நடிகையின் தங்கை!

நடிகர் அருண் விஜயின் பாக்ஸர் படத்தில் பிரபல நடிகையின் தங்கை இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

சென்னை: நடிகர் அருண் விஜயின் பாக்ஸர் படத்தில் பிரபல நடிகையின் தங்கை இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

தடம் படத்தின் மாபெரும் வெற்றியையடுத்து அருண் விஜய் நடிப்பில் உருவாகும் படம் ‘பாக்ஸர்’. இந்த படத்தை இயக்குநர் விவேக் இயக்க எட்ஸெட்ரா என்டெர்டெயின்மென்ட் சார்பில் வி.மதியழகன் தயாரிக்கிறார்.

குத்துச்சண்டை வீரராக அருண் விஜய் நடிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ‘இறுதிச்சுற்று’ நாயகி ரித்திகா சிங் நடிக்கிறார். மேலும் இந்தப் படத்துக்காக மலேசியா மற்றும் வியட்நாம் சென்று தற்காப்புக் கலைகளைக் கற்றுள்ளார் அருண் விஜய். 

sanjana

இந்த நிலையில் இந்தப் படத்தின் பூஜை, சென்னையில் இன்று (ஜூன் 21) நடைபெற்றது. இதில் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க நிக்கி கல்ராணியின் தங்கை சஞ்சனா கல்ராணி நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். மேலும்  கன்னடம், தெலுங்கு மற்றும் மலையாளப் படங்களில் நடித்துள்ள சஞ்சனா, இந்தப் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.