“அருண் விஜய்யின் 25 ஆண்டுகால திரைப்பயணம்” கேக் வெட்டி கொண்டாடிய ரசிகர்கள்!

 

“அருண் விஜய்யின்  25 ஆண்டுகால திரைப்பயணம்” கேக் வெட்டி கொண்டாடிய ரசிகர்கள்!

என்னை அறிந்தால் படம் அவருக்கு தமிழ் சினிமாவில் நீண்ட காலத்திற்கு பிறகு ஒரு நிலையான இடத்தை தந்துள்ளது எனலாம். 

அருண் விஜய்  1995 ஆம் ஆண்டு இயக்குநர்  சுந்தர்.சி யின் முறைமாப்பிள்ளை படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

ttn

 இதை தொடர்ந்து அவர் பல படங்கள் நடித்திருந்தாலும் அஜித்துடன் நடித்த என்னை அறிந்தால் படம் அவருக்கு தமிழ் சினிமாவில் நீண்ட காலத்திற்கு பிறகு ஒரு நிலையான இடத்தை தந்துள்ளது எனலாம். 

ttn

இந்நிலையில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள மாஃபியா  படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடந்தது.

rtn

அப்போது  அருண் விஜய் சினிமா துறைக்குள் நுழைந்து 25 ஆண்டுகள் ஆவதை கொண்டாடும் விதமாக  அவரது ரசிகர்கள் கேக் வெட்டி கொண்டாடினர்.

ttn

இந்த நிகழ்ச்சியில் நடிகை பிரியா பவானி  ஷங்கர், இயக்குநர்  கார்த்திக் நரேன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

ttn

லைகா நிறுவனம் தயாரித்துள்ள  மாஃபியா திரைப்படம் வரும் 21 ஆம் தேதி முதல் திரைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.