அருண் விஜய்யின் ‘தடம்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

 

அருண் விஜய்யின் ‘தடம்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

நடிகர் அருண்விஜய் நடித்திருக்கும் “தடம்” திரைப்படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது

சென்னை: நடிகர் அருண்விஜய் நடித்திருக்கும் “தடம்” திரைப்படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது.

என்னை அறிந்தால் திரைப்படத்தின் மூலம்  ரீஎண்ட்ரி ஆனா அருண் விஜய் கடந்த ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் வெளியான `செக்கச்சிவந்த வானம்’ படத்தில் நடித்துதிருந்தார். அதை தொடர்ந்து  தற்போது  `தடம்’, `சாஹோ’, `அக்னிச் சிறகுகள்’, `பாக்ஸர்’ போன்ற படங்களில் பிஸியாக நடித்து கொண்டு வருகிறார்.

இதில் `தடம்’ படத்தை மகிழ் திருமேனி இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே அருண் விஜய்யை வைத்து `தடையறத் தாக்க’ படத்தை இயக்கியுள்ளார். இதில் அருண் விஜய்யுடன் தன்யா ஹோப், ஸ்மிருதி வெங்கட், வித்யா பிரதீப் ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்நிலையில், தடம் திரைப்படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படம் வருகிற பிப்ரவரி 22-ஆம் தேதி ரிலீசாக உள்ளதாக அருண்விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் அருண்விஜய்யின்  ‘சாஹோ’, வா டீல் போன்ற திரைப்படங்களின்  அப்டேட் விரைவில் வெளியாகும் என எதிர்பாக்கப்படுகிறது.