அருண் விஜய்க்கு வாழ்த்து கூறிய வனிதா விஜயகுமார்…பதிலுக்கு அவர் செய்த காரியம் இதுதான்!

 

அருண் விஜய்க்கு வாழ்த்து கூறிய வனிதா விஜயகுமார்…பதிலுக்கு அவர் செய்த காரியம் இதுதான்!

பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் சமீபத்தில் கலந்து கொண்ட வனிதா விஜயகுமார், அனல் கிளப்பும் சண்டையில் ஈடுபட்டு பிக் பாஸ் வீட்டைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்.

பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் சமீபத்தில் கலந்து கொண்ட வனிதா விஜயகுமார், அனல் கிளப்பும் சண்டையில் ஈடுபட்டு பிக் பாஸ் வீட்டைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்.வனிதாவின் ஆதிக்கம் நாளுக்கு நாள் அதிகமாக இரண்டாவது வாரத்திலேயே வனிதா அதிரடியாக வெளியேற்றப்பட்டார். பின்பு நிகழ்ச்சியின்  சுவாரஸ்யம்  குறைவால் மீண்டும் பிக் பாஸால் உள்ளே அனுப்பப்பட்ட வனிதா மீண்டும் தனது பணியை சிறப்பாகச் செய்து முடித்தார்.

vanitha

தந்தையும் நடிகருமான விஜயகுமாருக்கும், வனிதாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு அது நீதிமன்றம் சென்றது. இதனால் வனிதா அவரது குடும்பத்தினரால் ஒதுக்கி வைக்கப்பட்டார் என்பதெல்லாம் பழைய கதை. 

இந்நிலையில் வனிதாவின் சகோதரரான நடிகர் அருண் விஜய் நேற்று தனது 42வது  பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு  பல்வேறு தரப்பினரும் வாழ்த்து கூறினர்.  அந்த வரிசையில் வனிதாவும் அருண் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்தார். இதுகுறித்து அவர் தனது  டிவிட்டர் பதிவில், கருத்து வேறுபாடுகளை சில சமயங்களில் தீர்த்துக் கொள்ளலாம். ஒரு வாழ்க்கை, ஒரு குடும்பம், ஒரே ரத்தம்.  நீங்களும் நானும் ஒன்றாக பயணிக்கத் தொடங்கினோம்…நமக்கும் இருக்கும் ஒற்றுமை தான் நம்மை பிரித்து காட்டுகிறது. உங்களுக்குப் பிடிக்கிறதோ , இல்லையோ ஐ லவ் யூ  என்று பதிவிட்டுள்ளார். 

vanitha

அருண் விஜய் வனிதாவின் இந்த வாழ்த்துக்கு எந்த பதிலும் அளிக்கவில்லை. இருப்பினும் தனது வாழ்த்து கூறிய அனைவர்க்கும் நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார். இத கண்ட வனிதா ரசிகர்கள், வனிதா அக்காவை மன்னிச்சிடுங்க அண்ணா என்று வனிதாவுக்காக வக்காலத்து வாங்கி வருகின்றனர்.