அருண் விஜய்க்கு சவால் விடுத்த குற்றம் 23 பட இயக்குநர்!

 

அருண் விஜய்க்கு சவால் விடுத்த குற்றம் 23 பட இயக்குநர்!

கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் ‘பாட்டில் கேப் சேலஞ்ச்’ என்ற புதிய சேலஞ்ச் வைரலாகி வருகிறது என்பது நாம் அறிந்ததே.

கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் ‘பாட்டில் கேப் சேலஞ்ச்’ என்ற புதிய சேலஞ்ச் வைரலாகி வருகிறது என்பது நாம் அறிந்ததே. கிக்கி சேலஞ், ஐஸ் பக்கெட் சேலஞ்ச், பிட்னஸ் சேனலில் சேலஞ்ச், நில்லு நில்லு சேலஞ் போன்றது போல் இதற்கும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. 

இந்த சவால் என்ன வென்றால், பாட்டிலின் மூடியைக் கால்களால் உதைத்து, அந்த மூடியை நீக்க வெண்டும். அதே நேரம், பாட்டிலும் கீழே விழக்கூடாது என்பது தான்.  இந்த சேலஞ்சில் ஹாலிவுட் நடிகர்களான ‘ஜேசன் ஸ்டாதம், லீவிஸ் டான், பாலிவுட் நடிகர் அக்சயகுமார் என்று பலரும் இதை வெற்றிகரமாகச் செய்து வீடியோ வெளியிட்டு வருகின்றனர். 

ariva

இந்த நிலையில் இந்த சேலஞ்ச் செய்யும் படி குற்றம் 23 பட இயக்குநர் அறிவழகன், அருண் விஜக்கு சவால் விடுத்துள்ளார். அவரின் அந்த பதிவில், ‘பாட்டில் கேப் சேலஞ்ச்’ மிகவும் நன்றாக உள்ளது. ஹாலிவுட், பாலிவுட் நடிகர்கள் செய்வது போல் அருண் விஜயிடம் எதிர்பார்க்கிறேன்’ என்று கூறியுள்ளார். அவரின் சவாலை அருண் விஜய் ஏற்பாரா என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.