அருண் ஜெட்லீ சிகிச்சை பெற்றுவரும் மருத்துவமனையில் திடீர் தீ விபத்து

அருண் ஜெட்லீ சிகிச்சை பெற்றுவரும் மருத்துவமனையில் திடீர் தீ விபத்து

டெல்லியில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி சிகிச்சை பெற்றுவரும் எய்ம்ஸ் மருத்துவமனையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் தொடர்ந்து அப்பகுதி முழுவதும் பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது.

தலைநகர் டெல்லியில் உள்ள பிரபல எய்ம்ஸ் மருத்துவமனை தற்போதைய அமைச்சர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் என பலரும் சிகிச்சை பெறும் மருத்துவமனையாகும். இத்தகைய பெரிய மருத்துவமனையில் இன்று மதியம் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

ஓரிரு வாரங்களுக்கு முன்பு இதே மருத்துவமனையில் தான் முன்னாள் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் சிகிச்சை பெற்றுவந்தார். அதேபோல் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தற்போது இதே மருத்துவமனையில் தான் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

fire accident

மருத்துவமனையின் முதல் மற்றும் இரண்டாம் தளங்களில் திடீரென தீவிபத்து ஏற்பட்டு தளம் முழுவதும் வெகுவாக பரவியது. இந்த தீ விபத்து ஏற்படுவதற்கு சிறிது நேரத்திற்கு முன்புதான் தற்போதைய மத்திய உள்துறை அமைச்சர்  அமித்ஷா அருண் ஜெட்லியின் உடல் நலனை நேரில் வந்து பார்த்து மருத்துவர்களிடம் விசாரித்துவிட்டு சென்றார்.

இந்நிலையில் திடீரென இப்படி தீ பற்றியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், தீ பரவிய உடனேயே அருகில் உள்ள தீயணைப்பு மையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு தீயணைப்பு படையினர் தற்போது தீயை அணைக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். 

குறிப்பிட்ட தளங்களில் சிகிச்சை பெற்று வந்த மக்களை மற்றொரு பகுதிக்கு அப்புறப்படுத்திவிட்டு விரைந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

நாளுக்கு நாள் அதிகமானோர் வந்து செல்லும் இத்தகைய பிரபலமான மருத்துவமனையில் திடீரென தீ பற்றி இருப்பதற்கான காரணத்தை போலீசார் விசாரித்து வருகின்றனர். இது பற்றிய முழு தகவல் விரைவில் அறிவிக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்