அருண் ஜெட்லியின் மறைவு தேசத்துக்கு பெரும் இழப்பு….. தலைவர்கள் இரங்கல்….

 

அருண் ஜெட்லியின் மறைவு தேசத்துக்கு பெரும் இழப்பு….. தலைவர்கள் இரங்கல்….

பா.ஜ.வின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான அருண் ஜெட்லி உடல் நல குறைவு காரணமாக கடந்த 9ம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஜெட்லியின் உடல் நிலை நாளுக்கு நாள் மிகவும் கவலைக்கிடமாக இருந்தது. இந்நிலையில் எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பலன் இன்றி இன்று மதியம் 12.07 மணிக்கு அருண் ஜெட்லி காலமானார். அருண் ஜெட்லியின் மறைவுக்கு அனைத்து கட்சி தலைவர்களும் ஆழந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

பிரதமர் மோடி தனது டிவிட்டரில், அருண் ஜெட்லி ஒரு அரசியல் ஜாம்பவான். உயர்ந்த அறிவுஜீவி மற்றும் சட்ட நிபுணர். இந்தியாவுக்கு பெரும் பங்களிப்பு தந்த தலைவர். அவரது மனைவி சங்கீதா ஜி மற்றும் அவரது மகன் ரோகனிட் போனில் பேசினேன். அவர்களிடம் இரங்கல் தெரிவித்தேன். ஓம் சாந்தி என பதிவு செய்து இருந்தார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா டிவிட்டரில், அருண் ஜெட்லியின் மறைவு ஆழ்ந்த துன்பத்தை கொடுத்துள்ளது. அவரது மறைவு எனக்கு தனிப்பட்ட முறையில் பெரும் இழப்பு. கட்சியின் மூத்த உறுப்பினரை மட்டுமல்ல எனது குடும்பத்தில் ஒருவரையும் இழந்து விட்டேன். அவர் பல ஆண்டுகள் என்னை வழிநடத்தியவர் என்று பதிவு செய்து இருந்தார்.

மம்தா பானர்ஜி தனது இரங்கல் செய்தியில், நீண்ட போராட்டத்துக்கு பிறகு அருண் ஜெட்லி காலமானது மிகுந்த வருத்தம் அளிக்கிறது. ஒரு சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் ஒரு சிறந்த வழக்கறிஞர், அனைத்து கட்சிகளாலும் பாதிக்கப்பட்டவர். இந்திய அரசியலுக்கு அவர் செய்த பங்களிப்பு நினைவு கூரப்படும். அவரது மனைவி, குழந்தைகள், நண்பர்கள் மற்றும் நலம் விரும்பிகளுக்கு எனது இரங்கல் என்று தெரிவித்து இருந்தார்.

மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், நிதின்கட்கரி, ஸ்மிரிதி இரானி டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், மகாராஷ்ரா முதல்வர் தேவந்திர பட்னாவிஸ் என பல்வேறு தலைவர்களும் டிவிட்டரில் இரங்கல் தெரிவித்தனர்.