அருணாச்சல பிரதேச முதல்வர் மீது பாலியல் வன்புணர்வு புகார்: மனுவை ஏற்க உச்சநீதிமன்றம் மறுப்பு

 

அருணாச்சல பிரதேச முதல்வர் மீது பாலியல் வன்புணர்வு புகார்: மனுவை ஏற்க உச்சநீதிமன்றம் மறுப்பு

அருணாச்சல பிரதேச முதல்வர் பிமா கண்டு மீது அளிக்கப்பட்ட பாலியல் வன்புணர்வு புகார் மனுவை ஏற்க மறுத்துள்ளது உச்சநீதிமன்றம்.

அருணாச்சல பிரதேச முதல்வர் பிமா கண்டு மீது அளிக்கப்பட்ட பாலியல் வன்புணர்வு புகார் மனுவை ஏற்க மறுத்துள்ளது உச்சநீதிமன்றம்.

அருணாச்சல பிரதேச முதல்வர் பிமா கண்டு மீது பாலியர் வன்புணர்வு புகார் மனு அளித்திருக்கிறார் ஒரு பெண்மணி. அந்த மனுவில், 2008-ஆம் ஆண்டு எனக்கு அரசாங்க வேலை தருவதாய் ஒருவர் என்னை அழைத்துச் சென்றார். அங்கு பிமா கண்டு உட்பட 4 நபர்கள் இருந்தார்கள். பிமா கண்டு தன்னை ஒரு இராணுவ அதிகாரி என அறிமுகம் செய்து கொண்டார். குளிர் பானத்தில் மயக்க மருந்தை கலந்துகொடுத்து என்னை வன்புணர்வு செய்தார்கள். எனக்கு அவர்களை அப்போது அடையாளம் சொல்லத் தெரியவில்லை. 2012-ஆம் ஆண்டு பிமா கண்டு முகத்தை பேப்பரில் பார்த்தபோதுதான் எனக்கு நியாபகம் வந்தது என குறிப்பிட்டுள்ளார்.

11 ஆண்டுகளுக்கு முன்  நடந்த சம்பவத்தில் எல்லாம் உச்சநீதிமன்றம் தலையிடாது என நீதிபதி ராஜன் கோகோய், தீபக் குப்தா மற்றும் சஞ்சீவ் கண்ணா அடங்கிய அமர்வு தெரிவித்துள்ளது. மேலும் இந்த மனுவை எடுத்துக்கொண்டு உயர்நீதிமன்றத்தில் முயற்சி செய்யும்படி அறிவுறுத்தியிருக்கிறது. ஆனால் அந்த பெண்மணி உச்சநீதிமன்றத்தை அனுக காரணமே காவல்துறையினரும், மாவட்ட நீதிமன்றமும் இந்த வழக்கை பதிவு செய்ய மறுத்ததால்தான். பிமா கண்டு மீது அளிக்கப்பட்டுள்ள புகார் மனுவில், துபன் தாசி எனும் அரசாங்க ஆசிரியர் மற்றும் டோர்ஜி வாங்சூ எனும் கனிம வளர்ச்சி துணை அலுவலர் பெயரும் குறிப்பிடப்பட்டுள்ளது.