அரிய வகை 2 வெள்ளை ஒட்டகச்சிவிங்கிகள் வேட்டை – உலகில் தற்போது ஒன்று மட்டுமே மீதமுள்ளது

 

அரிய வகை 2 வெள்ளை ஒட்டகச்சிவிங்கிகள் வேட்டை – உலகில் தற்போது ஒன்று மட்டுமே மீதமுள்ளது

உலகில் மொத்தம் 3 வெள்ளை ஒட்டகச்சிவிங்கிகளே இருந்தன. தற்போது 2 வெள்ளை ஒட்டகச்சிவிங்கிகள் வேட்டையாடப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.

நைரோபி: உலகில் மொத்தம் 3 வெள்ளை ஒட்டகச்சிவிங்கிகளே இருந்தன. தற்போது 2 வெள்ளை ஒட்டகச்சிவிங்கிகள் வேட்டையாடப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.

வடகிழக்கு கென்யாவில் 3 வெள்ளை ஒட்டகச்சிவிங்கிகள் வாழ்ந்து வந்தன. இந்த வெள்ளை ஒட்டகச்சிவிங்கிகள் மிகவும் அரிய வகை விலங்காகும். ஒரு ஆண் ஒட்டகச்சிவிங்கி மற்றும் பெண் ஒட்டகச்சிவிங்கி குட்டியோடு அங்கு இருந்தன. இந்த நிலையில், தற்போது பெண் வெள்ளை ஒட்டகச்சிவிங்கி மற்றும் அதன் குட்டி கொல்லப்பட்டுள்ளது. மேலும், ஒரே ஒரு வெள்ளை ஒட்டகச்சிவிங்கி மட்டுமே தற்போது உலகில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ttn

உலகின் அரியவகை ஒட்டகச்சிவிங்கியான வெள்ளை ஒட்டகச்சிவிங்கியின் மொத்த எண்ணிக்கை மொத்தம் மூன்றாக மட்டுமே இருந்து வந்தது. கடந்த 2017-ஆம் ஆண்டு அந்த ஒட்டகச்சிவிங்கியை வனவிலங்கு புகைப்படக்காரர் ஒருவர் புகைப்படம் எடுத்ததன் மூலம் அது பற்றி உலகிற்கு தெரியவந்தது. வெள்ளை ஒட்டகச்சிவிங்கிகளை வேட்டையாடியது யார் என்று விசாரணை நடைபெற்று வருகிறது.