அரிய சூரிய கிரகணம்..மாலைப் பொழுதாக மாறிய பகல்.. இதனை மீண்டும் 11 வருடம் கழித்துத் தான் காண முடியும்!

 

அரிய சூரிய கிரகணம்..மாலைப் பொழுதாக மாறிய பகல்.. இதனை மீண்டும் 11 வருடம் கழித்துத் தான் காண முடியும்!

விண்ணில் அரிதான சூரிய கிரகணம் இன்று காலை 8:06 மணிக்குத் தொடங்கி, சூரியனின் பகுதி அளவில் நெருப்பு வளையமாகத் தெரிகிறது. இதையே நெருப்பு வளையச் சூரிய கிரகணம் என்று அழைக்கிறோம்.

விண்ணில் அரிதான சூரிய கிரகணம் இன்று காலை 8:06 மணிக்குத் தொடங்கி, சூரியனின் பகுதி அளவில் நெருப்பு வளையமாகத் தெரிகிறது. இதையே நெருப்பு வளையச் சூரிய கிரகணம் என்று அழைக்கிறோம். சூரிய கிரகணத்தால் அனைத்து கோவில்களின் நடைகளும் சாத்தப்பட்டுள்ளன. சூரிய கிரகணம் முடிந்த பிறகு அனைத்து கோவில்களும் திறக்கப்பட்டுச் சிறப்புப் பூஜைகள் நடைபெறும். 

ttn

சூரிய கிரகணத்தால் ஒடிசாவில் அரசு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சூரிய கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்க வேண்டாம் என்றும் தமிழகத்தில்  திருச்சி, திண்டுக்கல், திருப்பூர், கோவை, சேலம் உள்ளிட்ட பகுதிகளில் தெளிவாகத் தெரியும்  என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். கர்நாடகா மற்றும் கேரளாவிலும் இந்த சூரிய கிரகணத்தைக் காண முடியும். சூரிய கிரகணம் இன்று காலை 11:09 மணிக்கு முழுமையாக நிறைவடைய உள்ளது. அப்படி என்ன அரிய சூரிய கிரகணம் என்று பார்க்கிறீர்களா?.. இந்த சூரிய கிரகணத்தின் போது பல்வேறு பகுதிகளில் மாலைப் பொழுது போன்று ரம்மியாக காட்சியளிக்குமாம்.

ttn

கேரளா மாநிலத்தில் தற்போது மாலை வேளை போன்று இருக்கிறதாம். இதனை அங்குள்ள மக்கள்  அதிசயமாக அவதானித்து வருகின்றனர். அந்த புகைப்படங்கள் தற்போது இணையதளத்தில் வெளியாகி வருகின்றன. இந்த சூரிய கிரகணத்தை மீண்டும் பார்க்க 11 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். அதாவது வரும் 2031 ஆம் ஆண்டு தான், இந்த சூரிய கிரகணம் மீண்டும் நிகழும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.