அரியலூர் மாவட்டத்தில் மெடிக்கலில் பணியாற்றி வந்த இரண்டு பெண்களுக்கு கொரோனா பாதிப்பு

 

அரியலூர் மாவட்டத்தில் மெடிக்கலில் பணியாற்றி வந்த இரண்டு பெண்களுக்கு கொரோனா பாதிப்பு

மெடிக்கலில் பணியாற்றி வந்த இரண்டு பெண்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அரியலூர்: மெடிக்கலில் பணியாற்றி வந்த இரண்டு பெண்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அரியலூர் மாவட்டத்திலிருந்து கடந்த மார்ச் 22-ஆம் தேதி டெல்லி நிஜாமுதீன் தப்ளிக் கூட்டத்திற்கு 5 பேர் சென்று வந்தனர். இதில் செந்துறை நகரைச் சேர்ந்த ஒருவர் மெடிக்கல் கடை நடத்தி வருகிறார். டெல்லி கூட்டத்திற்கு சென்று வந்ததன் காரணமாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் இவரை அரியலூர் அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தி மருத்துவர்கள் பரிசோதனை செய்தனர். ஆனால் அவருக்கு கொரோனா தொற்று பாதிப்பில்லை என தெரிய வரவே அவரை வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

medical

இதைத் தொடர்ந்து, அவரது மெடிக்கலில் பணியாற்றி வந்த ஊழியர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது அவர்களில் செந்துறையைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும், ராயம்புரம் கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதனையடுத்து அந்த இருவரும் மருத்துவ குழுவினரால் 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு நள்ளிரவில் அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் இரண்டு பெண்களின் உறவினர்கள் பத்து பேர் கொரோனா சந்தேகத்தின் அடிப்படையில் பரிசோதனைக்காக செந்துறை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரபட்டு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.