அரியலூர், கள்ளக்குறிச்சி மருத்துவக்கல்லூரிகளுக்கு ரூ.729 கோடி நிதி ஒதுக்கீடு : தமிழக அரசு அரசாணை

 

அரியலூர், கள்ளக்குறிச்சி மருத்துவக்கல்லூரிகளுக்கு ரூ.729 கோடி நிதி ஒதுக்கீடு : தமிழக அரசு அரசாணை

ஏற்கனவே மாநில அரசு கட்டுப்பாட்டில் 24 மருத்துவக் கல்லூரிகளும் 3,350 எம்.பி.பி.எஸ். இடங்களும் இருக்கும் நிலையில், புதியதாக 9 கல்லூரிகள் தொடங்கப்பட உள்ளன.

தமிழகத்தில் புதிதாக மருத்துவக் கல்லூரிகள் அமைக்குமாறு மத்திய அரசிடம் தமிழக அரசு ஒப்புதல் கேட்டதன் பேரில், முதலாவதாக  நீலகிரி, ராமநாதபுரம், நாமக்கல், திருப்பூர்,  திண்டுக்கல், விருதுநகர் ஆகிய 6 மாவட்டங்களிலும் மருத்துவக் கல்லூரி தொடங்க அனுமதி அளித்தது. அதன் பின்னர், மீண்டும் கிருஷ்ணகிரி, திருவள்ளூர், நகை ஆகிய மாவட்டங்களில் 3 மருத்துவக் கல்லூரி தொடங்க அனுமதி வழங்கப்பட்டது. ஏற்கனவே மாநில அரசு கட்டுப்பாட்டில் 24 மருத்துவக் கல்லூரிகளும் 3,350 எம்.பி.பி.எஸ். இடங்களும் இருக்கும் நிலையில், புதியதாக 9 கல்லூரிகள் தொடங்கப்பட உள்ளன.

ttn

இதுமட்டுமில்லாமல் சமீபத்தில் அரியலூர், கள்ளக்குறிச்சி ஆகிய இரண்டு மாவட்டங்களிலும் மருத்துவக் கல்லூரி அமைக்க  மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியது. இந்நிலையில் அரியலூர் மருத்துவக் கல்லூரிக்கு ரூ.347 கோடி நிதி ஒதுக்கீடு செய்தும், கள்ளக்குறிச்சி மருத்துவக் கல்லூரிக்கு ரூ.382 கோடி நிதி ஒதுக்கீடு செய்தும் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.