அரிசி வாங்க காசில்லை..!  செல்போன் விலை 1 லட்சமாம்!  கூட்டத்தைப் பார்த்தீங்களா?

 

அரிசி வாங்க காசில்லை..!  செல்போன் விலை 1 லட்சமாம்!  கூட்டத்தைப் பார்த்தீங்களா?

பல கிராமங்களில் இன்றும் அரிசி வாங்குவதற்கு கூட காசில்லாமல் வாழும் மக்கள் இருக்கிறார்கள். ஒரு வேளை உணவுடன் அன்றைய நாளை முடித்துக் கொள்பவர்களும் வாழ்கிறார்கள். பண மதிப்பிழப்பு, ஜிஎஸ்டி போன்றவைகளால் நம் நாட்டின் பொருளாதாரம் அதள பாதாளத்திற்கு வீழ்ந்து விட்டது என்று பொதுமக்களில் பெரும்பாலோரும், எதிர்கட்சிகளும் மோடியை குற்றம் சாட்டி வருகிறார்கள். 
இந்நிலையில்,  ஐ போன் வகைகளில், அதன் புதிய வெர்சனாக ஐ போன் 11ப்ரோ இன்று காலையில் வெளியானது. இந்த ஐ போன் புதிய மாடலை வாங்குவதற்காக சென்னையில் உள்ள ஆப்பிள் நிறுவன அங்காடியில் அதிகாலையில் இருந்தே மக்கள் காத்திருக்கத் துவங்கினார்கள்.

iphone

நீங்கள் பார்த்துக் கொண்டிருப்பது இன்று காலை 9 மணிக்கு எடுத்த புகைப்படம். எல்லா வேலைகளையும் விட்டு விட்டு, புது மாடல் செல்போன் வெளியானவுடன் முண்டியடித்துக் கொண்டு காத்திருந்த மக்கள் கூட்டம், வரிசையில் நின்று வாங்க நினைக்கிற ஐ போன் ப்ரோ11 மாடல் விலை என்ன தெரியுமா? ரொம்ப அதிகம் எல்லாம் இல்லை. ஜஸ்ட்… 1 லட்சத்து 14 ஆயிரத்து 400 ரூபாய் தான்.  ஒரு பக்கம் நாட்டின் பொருளாதாரம் சீர்கெட்டு விட்டது,   பணப்புழக்கம் இல்லவே இல்லை.. என்று புலம்பிக் கொண்டிருக்கிறோம். இன்னொரு பக்கம் லட்ச ரூபாய்க்கு செல்போனும் வாங்க வரிசையில் இத்தனைப் பேர் காத்திருக்கிறோம். இது தான் ஜனநாயகம்! ஜெய் ஹிந்த்!