அரபிக் கடலில் புயல் எச்சரிக்கை… சென்னை வானிலை மையம் அறிவிப்பு

 அரபிக் கடலில் புயல் எச்சரிக்கை… சென்னை வானிலை மையம் அறிவிப்பு

கோடை முடிவுக்கு வந்ததும், தமிழகத்தின் வெப்பநிலை குறையும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில், தமிழகத்தின் காஞ்சிபுரம், திருவள்ளூர் போன்ற மாவட்டங்களில் வெப்ப நிலை அதிகரித்திருக்கிறது. நேற்று சென்னை மீனம்பாக்கத்தில் 100 டிகிரிக்கும் மேலாக வெப்பம் பதிவாகியிருந்தது. 

இந்நிலையில், காலநிலைப் பற்றி அறிவித்திருந்த சென்னை வானிலை மையம், இந்த வருடத்தின் தென்மேற்குப் பருவமழை வலுப்பெற்றுள்ளதை அடுத்து, அரபிக் கடலில் புயல் எச்சரிக்கை விடுத்துள்ளது.

rain

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கி, வலுப்பெற்றதை அடுத்து அரபிக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை புயலாக மாற வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து டாப் தமிழ் நியூஸ் நிருபரிடம் பேசிய வானிலை ஆய்வு மையத்தின் இயக்குனர் புவியரசன் கூறியதாவது, ”லட்சத்தீவை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் கிழக்கு, மத்திய அரபிக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. 
இது அடுத்த 12 மணிநேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவும், அடுத்த 24 மணி நேரத்தில் வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து புயலாகவும் மாறக்கூடும். இதன் காரணமாக மீனவர்கள் அடுத்த மூன்று நாட்களுக்கு அரபிக்கடல் பகுதிக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம்’ என்று அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். 
கேரளாவிலும், தமிழகத்தின்  தென் மாவட்டங்களிலும் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்துள்ளார்.