அரபிக் கடலில் பயிற்சியில் ஈடுபடும் பாகிஸ்தான் கடற்படை! போர் கப்பல்களை தயார் நிலையில் வைத்தது இந்திய கடற்படை

 

அரபிக் கடலில் பயிற்சியில் ஈடுபடும் பாகிஸ்தான் கடற்படை! போர் கப்பல்களை தயார் நிலையில் வைத்தது இந்திய கடற்படை

வட அரபிக் கடல் பகுதியில் பாகிஸ்தான் கடற்படை பயிற்சி மேற்கொண்டு வருவதால், இந்திய கடற்படை தனது போர்க்கப்பல்களை தயார் நிலையில் வைத்துள்ளது.

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு நீக்கியதால் இந்தியா-பாகிஸ்தானுக்கு இடையிலான உறவு மிகவும் மோசமாக உள்ளது. மேலும் காஷ்மீருக்குள் தீவிரவாதிகளை ஊடுருவ செய்ய எல்லையில் பாகிஸ்தான் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்திய பாதுகாப்பு படையின் தரமான பதிலடியால் பாகிஸ்தானால் ஒன்று செய்ய முடியவில்லை.  

இந்திய போர் கப்பல்

இந்நிலையில், வட அரபிக் கடல் பகுதியில் பாகிஸ்தானின் கடற்படை நேற்று முதல் பயிற்சி மேற்கொண்டு வருகிறது. வரும் 29ம் தேதி வரை இந்த பயிற்சி நடைபெற உள்ளது. இதற்காக வர்த்தக கப்பல்களுக்கு பாகிஸ்தான் கடல் எச்சரிக்கை விடுத்துள்ளது. செப்டம்பர் 25 முதல் 29ம் தேதி வரை ஏவுகணை, ராக்கெட் மற்றும் துப்பாக்கி சூடு போன்ற பயிற்சிகளை மேற்கொள்ள உள்ளது. 

இதனால் உஷாரான இந்திய கடற்படை தனது போர் கப்பல்கள், நீர்மூழ்கிக்கப்பல்கள், கடல்ரோந்து விமானங்கள் மற்றும் போர் விமானங்களை எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்தும் வகையில் தயார் நிலையில் வைத்துள்ளது. மேலும் நீண்ட தூர கடல் கடல்கண்காணிப்பு பயன்படுத்தும் போஸிடன்-81 ரோந்து விமானம் மூலம் பாகிஸ்தான் கடற்படை பயிற்சி மேற்கொள்ளும் பகுதியை கண்காணித்து வருகிறது.

இந்திய போர் கப்பல்கள்

இது தொடர்பாக பாதுகாப்பு துறை வட்டாரங்கள் கூறுகையில், பாகிஸ்தானின் கடற்படை பயிற்சி காரணமாக எந்தவொரு துரதிர்ஷ்டமான சம்பவங்களை தவிர்க்கவும், பாகிஸ்தான் ராணுவம் அல்லது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தும் அச்சுறுத்தல் உள்ளதால் இந்திய பாதுகாப்பு படைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் கடற்படை பயிற்சி வழக்கமான ஒன்றாக இருந்தாலும், திடீரென அதன் நோக்கம் வேகமாக மாறி விட வாய்ப்புள்ளது என தெரிவித்தன.