அரபிக்கடலில் நிலவிய மோசமான வானிலை : சிக்கித் தவித்த 264 மீனவர்கள் மீட்பு

 

அரபிக்கடலில் நிலவிய மோசமான வானிலை : சிக்கித் தவித்த 264 மீனவர்கள் மீட்பு

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல், தேங்காய் பட்டணம் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த மீனவர்களும் கேரளாவைச் சேர்ந்த மீனவர்களும் அரபிக் கடல் பகுதியில் மீன் பிடித்து வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல், தேங்காய் பட்டணம் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த மீனவர்களும் கேரளாவைச் சேர்ந்த மீனவர்களும் அரபிக் கடல் பகுதியில் மீன் பிடித்து வருகின்றனர். கடந்த 3 ஆம் தேதி 50க்கும் மேற்பட்ட படகுகளில் 264 மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றுள்ளனர். அரபிக் கடலில் நிலவிய மோசமான வானிலையின் போது இவர்கள் மீன்பிடிக்கச் சென்றதால், திசை மாறி சென்று அரபிக் கடலில் சிக்கியுள்ளனர். இது குறித்து கடலோர காவல்படைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ttn

கோவா கடல் பகுதியிலிருந்து 250 மைல் தொலைவில் அந்த மீனவர்கள் சிக்கியுள்ளதாகக் கிடைத்த தகவலின் பேரில், அவர்களை மீட்பதற்காக 7 கப்பல்கள் மற்றும் டோர்னியர் ரக விமானங்களுடன் கடலோர காவல்படையாயினர் சென்றுள்ளனர்.

ttn

இவர்கள் செல்வதற்கு முன்னரே, இந்தியச் சரக்கு கப்பல் நவ்தேனு பூர்ணா கடலில் தத்தளித்த 86 மீனவர்களையும், ஜப்பான் மீன்பிடி கப்பல் 34 மீனவர்களையும் மீட்டுள்ளது. அதன் பிறகு, கடலோர காவல்படை மீதமுள்ள மீனவர்களை மீட்டுள்ளது. மீட்கப்பட்ட மீனவர்களுக்கு முதலுதவியும் உணவும் அளிக்கப்பட்டு பத்திரமாகவுள்ளதாகவும் அவர்களை விரைவில் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்றும் கடலோர காவல்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.