அரபிக்கடலில் உருவாகியுள்ளது ‘கியார்’ புயல் : இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்..

 

அரபிக்கடலில் உருவாகியுள்ளது ‘கியார்’ புயல் : இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்..

அரபிக் கடலில் நிலைக் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று காலை வலுப்பெற்றுப் புயலாக மாறியுள்ளது.

அரபிக் கடலில் நிலைக் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று காலை வலுப்பெற்றுப் புயலாக மாறியுள்ளது. இந்தப் புயலுக்கு ‘கியார்’ புயல் எனப் பெயரிடப்பட்டுள்ளது. அரபிக் கடலில் உருவாகியுள்ள கியார் புயல் அடுத்த 24 மணி நேரத்தில் இன்னும் வலுப்பெற வாய்ப்பு உள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Storm

மணிக்கு 200 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடிய ‘கியார் புயல்’ தற்போது மும்பையிலிருந்து 380 கி.மீ தூரத்தில் உள்ளது. இப்புயல் அரபிக் கடல் வழியே ஓமன் கடற்கரையை நோக்கிச் சென்று தீவிர புயலாக மாறும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. இதனால், கடலோர மாநிலங்களான கர்நாடகா, மகாராஷ்டிரா மற்றும் கோவாவில் அதிக மழை பெய்யும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.