அரச பதவிகளில் அமரும் யோகத்தை தரும் மரகத லிங்கம்

 

அரச பதவிகளில் அமரும் யோகத்தை தரும் மரகத லிங்கம்

மரகதலிங்கம்: மரகதலிங்கம் என்பது மரகதம் எனும் கனிமத்தால் செய்யப்பட்ட சிவலிங்கமாகும். இந்த சிவலிங்கம் மரகதத்தின் தன்மையால் பச்சை நிறமுடையதாக இருக்கின்றது.இந்த மரகத லிங்கத்தினை தமிழகத்திலுள்ள எண்ணற்ற சிவாலயங்களில் பிரதிஷ்டை செய்து வாழிபாடு செய்து வருகிறார்கள்.

sivan

மரகதம் பெரில் வகையைச் சேரந்த ஒரு கனிமம் ஆகும்.வனேடியம் என்ற மூலப் பொருள் கலந்துள்ளதால் மரகதத்திற்கு பச்சை நிறம் கிடைக்கிறது. பச்சை நிறம் கொண்ட மரகதம் ஒளிரும் தன்மையுடையது.இதில் சிலிக்கன், அலுமினியம்,மக்னீசியம் போன்ற இரசாயனக் கலவைகள் அடங்கியுள்ளன. 

இக்கற்கள் மிக மென்மையானவை,எளிதில் நொறுங்கும் தன்மை உடையவையாகவும் அமைந்துள்ளது.கண்ணாடிப் பாத்திரம் ஒன்றில் பாலை ஊற்றி அதில் மரகலிங்கத்தினை வைத்தால் பால் முழுவதும் பச்சை நிறமாகத் தோன்றுவது வியக்கவைக்கும் நிகழ்வாகும். 

sivan

மேலும் நீர் நிறைந்த பாத்திரத்தில் மரகதலிங்கத்தினை வைக்கும் பொழுது நீர் முழுவதும் பச்சை நிறமாக மாறுவதும் சிறப்பு வாய்ந்த ஒன்றாக கருதப்படுகிறது. 

ஏழு மரகதலிங்கங்கள் இந்திரன் மூலம் முசுகுந்த சோழச்சக்ரவர்த்திக்குக் கிடைத்தாக சொல்லப்படுகிறது. இந்த மரகதலிங்கங்களை இந்திரனே பூஜித்து வந்ததாக கருதப்படுகிறது.

முசுகுந்த சக்ரவர்த்தி 12 ஆம் நூற்றாண்டில் வேதாரண்யம், திருக்குவளை, திருக்கரவாசல், திருவாரூர், திருநள்ளாறு, நாகப்பட்டினம், திருவாயுமூர் ஆகிய ஏழு இடங்களில் உள்ள சிவன் கோவில்களுக்கு (சப்த விடங்க தலங்கள்) விலைமதிப்பில்லாத மரகதலிங்கங்களை மக்கள் வழிப்பாட்டிற்காக அமைத்துக் கொடுத்துள்ளார்.

sivan

சப்தவிடங்க தலங்களில் மரகதலிங்களுக்கு செய்யப்படும் பால் அபிஷேகம் மிகச்சிறந்த மருத்துவ சக்தியைக் கொண்டது.மேலும் இரவில் மரகதலிங்களின் மேல் சாற்றி காலையில் வழங்கப்படும் சந்தனமும் மிகச்சிறந்த மருத்துவ சக்தி வாய்ந்ததாக கருதப்படுகிறது.

செங்கல்பட்டு அருகே உள்ள திருஇடைச்சுரம் என்ற திருத்தலம் தற்போது திருவடி சூலம் என்று அழைக்கப்படுகின்றது. இங்குள்ள சிவலிங்கம் ஒரு சுயம்பு மரகதலிங்கம் ஆகும். இத்திருக்கோயிலில்  உள்ள சிவபெருமான் பச்சையாகக் காட்சியளிக்கின்றார்.இந்த லிங்கத்திற்கு கற்பூர தீபம் காட்டும்போது அந்த ஒளி லிங்கத்தின் மீது பட்டுப் பிரதிபலிக்கின்றது.புற்றுருவாக இருந்த சுவாமிக்கு அம்பிகை பசுவாக வந்து பால் பொழிந்த திருக்கோயில் இதுவாகும்.

sivan

அதனையடுத்து வேலூர் காவிரிப்பாக்கம் அருகே உள்ள சிறுகரும்பூரில் உள்ள சுந்தர காமாட்சி சமேத திரிபுராந்தக ஈஸ்வரர் கோயிலில் உள்ள மரகத லிங்கம் ஆயிரம் ஆண்டுகள்  பழமைவாய்ந்தது.மேலும் திருச்சி அருகிலுள்ள மரகதாசலேசுவரர் கோயில் திருஈங்கோய்மலையில் சிவலிங்கம், பெயருக்கேற்ப மரகதக்கல் நல்ல பச்சை நிறத்தில் பளபளப்பாக இருக்கிறது.

temple

சென்னைக்கு அருகில் உள்ள சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் உள்ள சிலைகளில் சுவாமி, ஆதிமூலர், நவக்கிரகம் தவிர மற்ற சிலைகள் பச்சைக்கல்லில் செய்யப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது. 

கொடிமரத்துக்கு அருகில் முருகப்பெருமானின் மரகதப்பச்சை மயில் கொலுவாக வீற்று இருக்கிறது. கோவிலின் தென்மேற்கு மூலையில் மரகதகல்லில் சூரியனார் சிலை, நேர் எதிரில் கிழக்கே திருமுகம் கொண்ட மரகதவிநாயகர் (ராஜகணபதி) சிலை முருகப்பெருமானுக்கு தெற்கே அண்ணாமலையார் சிலை ஆகிய அனைத்தும் மரகதகல்லில் அமைந்துள்ளது. 

sivan

இங்குள்ளது போன்ற பெரிய மரகதலிங்கம் வேறு எங்கும் இல்லை என்பது வியக்கவைக்கும் நிகழ்வாகும். இக்கோவிலில் உள்ள  எல்லா விக்கிரகங்களும் மரதகப்பச்சை கல்லில் அமைந்துள்ளது சிறப்பான ஒன்றாகும்.இக்கோவிலில் அமைந்துள்ளது போல் வேறு எந்தக் கோவிலிலும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நவகிரகங்களில் புதனுக்கு உரிய ரத்தினமாக மரகதம் கருதப்படுகிறது.எனவே,மரகத லிங்கத்தை வழிபடுவதன் மூலம் கேட்ட வரத்தை,கேட்டவுடன் பெற முடியும் என சில ஆன்மிக நூல்களில் கூறப்பட்டுள்ளது.சில குறிப்பிட்ட ரத்தினங்களுக்கு ஆக்ரஷ்ன சக்தி உண்டு.

அந்த வகையில் புதனுக்கு உரிய மரகதத்தை,லிங்க வடிவில் வழிபடுவதன் மூலம் கேட்ட வரத்தைப் பெறலாம்.

natrajar

கல்வி, ஆரோக்கியம், அரசருக்கு நெருக்கமான பதவிகளில் அமரும் யோகத்தை மரகத லிங்கம் தரக்கூடிய வல்லமை படைத்தது.இதுமட்டுமின்றி வியாபாரத்தில் விருத்தியடையவும் மரகத லிங்கத்தை வணங்கலாம்.

இவற்றையெல்லாம் விட முக்கியமாக கருதப்படுவது,மரகத லிங்கத்தை வணங்குவதன் மூலம் சகல விதமான தோஷங்களில் இருந்தும் நிவர்த்தி பெற முடியும் என்பது மக்களின் நம்பிக்கை ஆகும்.

புதனுக்கு உரிய மரகதத்தை லிங்கவடிவில் வழிபடுவது மிக சிறந்தபலனை அளிக்கும் என்று புராணங்கள் கூறுகின்றன.மரகத லிங்கத்தை இந்திரன் வழிப்பட்டதாக புராணங்கள் கூறுகின்றன.இவ்வாறு மரகதலிங்கத்தை வழிபட்டால் தீராத வியாதிகள் குணமடையும் என்பது முன்னோர் கூற்று. 

 

#மரகதப்பச்சை  #மரகதலிங்கம்  #புதன்  #புதன்கிரகம்  #நவகிரகம்  #திருவடிசூலம் #சிறுவாபுரி #சிறுகரும்பூர்  #இந்திரன்வழிபட்டலிங்கம்  #பால்அபிஷேகம்  #ஆக்ரஷ்னசக்தி  #Mercury  #MercuryPlante #AllAboutMercury  #InterestingFactsaboutPlanetMercury