அரச குடும்பத்தில் இருந்து வெளியேறலாம்… ஹாரிக்கு அனுமதி கொடுத்த எலிசபெத் ராணி

அரச குடும்பத்தில் இருந்து வெளியேறலாம்… ஹாரிக்கு அனுமதி கொடுத்த எலிசபெத் ராணி

இங்கிலாந்து இளவரசர் சார்லர் – மறைந்த டயானாவின் இளைய மகன் ஹாரி. இவருக்கும் நடிகை மேகன் மெர்கலுக்கும் கடந்த 2018ம் ஆண்டு திருமணம் ஆனது. மேர்கலுக்கு உரிய மரியாதை அளிக்கவில்லை, இன ரீதியான பாகுபாடு காட்டப்பட்டதாகப் புகார்கள் எழுந்தன. இதனால், இளவரசர் ஹாரியும் அதிருப்தியில் இருக்கிறார் என்று சொல்லப்பட்டது.

இங்கிலாந்து அரச குடும்பத்தில் இருந்து வெளியேற இளவரசர் ஹாரிக்கு இங்கிலாந்து அரசி எலிசபெத் ஒப்புதல் அளித்திருப்பது அந்நாட்டு மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இங்கிலாந்து இளவரசர் சார்லர் – மறைந்த டயானாவின் இளைய மகன் ஹாரி. இவருக்கும் நடிகை மேகன் மெர்கலுக்கும் கடந்த 2018ம் ஆண்டு திருமணம் ஆனது. மேர்கலுக்கு உரிய மரியாதை அளிக்கவில்லை, இன ரீதியான பாகுபாடு காட்டப்பட்டதாகப் புகார்கள் எழுந்தன. இதனால், இளவரசர் ஹாரியும் அதிருப்தியில் இருக்கிறார் என்று சொல்லப்பட்டது.

prince-harry

இந்த நிலையில், இங்கிலாந்து அரச குடும்பத்தினரிடம் கலந்தாலோசிக்காமல் குடும்பத்தில் இருந்து பிரியப் போவதாக இளைய இளவரசர் ஹாரி திடீரென்று அறிவித்தார். இதனால், இங்கிலாந்து அரச குடும்பத்தினர் மட்டுமல்லாமல் மக்களும் அதிர்ச்சியடைந்தனர். இளவரசர் ஹாரியை சமாதானம் செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. எதற்குமே ஹாரி உடன்படவில்லை என்று கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து இங்கிலாந்து அரச குடும்பத்தில் இருந்து ஹாரி, மெர்க்கல் பிரிவது பற்றி ஆலோசனைக் கூட்டத்தை இங்கிலாந்து அரசி எலிசபெத் கூட்டினார். இதில், அரச குடும்பத்தின் நெருங்கிய சொந்தங்கள் பங்கேற்றனர். 

prince-harry-656a

கூட்டத்துக்குப் பிறகு இங்கிலாந்து அரசி எலிசபெத் பெயரில் அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. அதில், “புதிய வாழ்க்கை தொடங்க இருக்கும் ஹாரிக்கும், மேர்க்கலுக்கும் வாழ்த்துக்கள். புது வாழ்வு தொடங்கும் அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கப்படும். அரச குடும்ப உறுப்பினர்களாக அவர்கள் தொடர்ந்து பணியாற்ற வேண்டும் என்று நாங்கள் விரும்பினோம். ஆனாலும், சுதந்திரமாக வாழ்க்கை வாழ வேண்டாம் என்ற அவர்கள் விரும்பியதால், அந்த விருப்பத்துக்கு மரியாதை அளிக்கிறோம். ஹாரியும் மேகனும் தங்கள் புதிய வாழ்வுக்கு பொதுப் பணத்தை பயன்படுத்த விரும்பவில்லை என்று கூறிவிட்டனர். காலம் மாற்றத்தை ஏற்படுத்தும். குடும்பத்தை விட்டுப் பிரிந்து செல்வது தொடர்பான கடினமான சிக்கலான விஷயத்தில் சில பணிகள் உள்ளன. இறுதி முடிவு உள்ளிட்டவை வரும் நாட்களில் முடிவடையும்” என்று குறிப்பிட்டிருந்தார்.
இதன் மூலம் ஹாரி பிரிந்து செல்வது உறுதி செய்யப்பட்டுவிட்டது. அனைத்து சட்ட ரீதியான நடவடிக்கைக்குப் பிறகு ஹாரியும் மேகன் மெர்க்கலும் கனடாவில் குடியேறத் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.