அரசு விழா மேடையில் எச்.ராஜா; அதிமுகவை மதிக்காத பாஜக?!

 

அரசு விழா மேடையில் எச்.ராஜா; அதிமுகவை மதிக்காத பாஜக?!

தமிழக அரசு விழா மேடையில் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா மொழிபெயர்ப்பாளராக பேசுவதற்கு பொது வெளியில் விமர்சனம் எழுந்து வருகிறது.

கன்னியாகுமரி: தமிழக அரசு விழா மேடையில் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா மொழிபெயர்ப்பாளராக பேசுவதற்கு பொது வெளியில் விமர்சனம் எழுந்து வருகிறது.

மக்களவை தேர்தலை முன்னிட்டு அதிமுகவும் பாஜகவும் கூட்டணி அமைத்தது. பாஜகவுடன் கூட்டணி அமைக்க அதிமுக போட்ட முக்கியமான கன்டிசன், எச்.ராஜாவுக்கு சீட்டு வழங்க முடியாது என்பதேயாகும். இதனால் கூட்டணி பேச்சு வார்த்தையின் போது கூட எச்.ராஜா வரவில்லை. மத கலவரங்களை தூண்டும் விதமாக பேசும் எச்.ராஜாவை முன்னிலைப்படுத்தினால் ஓட்டு தேறாது என அதிமுக நினைத்திருக்கிறது. இதனால் எச்.ராஜாவை அதிமுக விழாக்களிலும் கலந்துகொள்ள அனுமதிக்க வேண்டாம் என முதல்வர் எடப்பாடி தரப்பு பாஜகவிடம் கேட்டுக் கொண்டது! தமிழ் தெரியாத பிரதமர் மோடிக்கு அது கேட்கவில்லை போலும், அதிமுக கேட்டுக் கொண்டதை பொருட்படுத்தாமல் எச்.ராஜாவை மொழிபெயர்ப்பாளராக நியமித்திருக்கிறது பாஜக தரப்பு.

தற்போது கன்னியாகுமரியில் நடந்து வரும் அரசு விழாவில் மோடியின் பேச்சை மொழிபெயர்த்து வருகிறார் எச்.ராஜா. அதிமுக அவ்வளவு சொல்லியும் கேட்காமல், பாஜக எச்.ராஜாவை அழைத்து வந்தது அதிமுகவினருக்கு கடுப்பை கிளப்பியிருக்கிறது!