அரசு வாட்டர் மாஃபியாக்களுக்கு உதவுகிறது: நடிகர் சித்தார்த் குற்றச்சாட்டு!

 

 அரசு வாட்டர் மாஃபியாக்களுக்கு உதவுகிறது: நடிகர் சித்தார்த்  குற்றச்சாட்டு!

அரசுக்கு நீரை சேமிக்கும் திட்டம் இல்லை.  வாட்டர் மாஃபியாக்களுக்கு உதவுவதே அதன் எண்ணம் என்று நடிகர் சித்தார்த் குற்றம் சாட்டியுள்ளார். 

சென்னை:  அரசுக்கு நீரை சேமிக்கும் திட்டம் இல்லை.  வாட்டர் மாஃபியாக்களுக்கு உதவுவதே அதன் எண்ணம் என்று நடிகர் சித்தார்த் குற்றம் சாட்டியுள்ளார். 

water

தமிழகத்தில்  வரலாறு காணாத தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. அனைத்துப் பகுதிகளிலும் தண்ணீருக்காக மக்கள் குடங்களுடன் காத்துக் கிடக்கின்றனர். தண்ணீர் பற்றாக்குறையால்  பள்ளிகள். அலுவலகம், மருத்துவமனை  என அனைத்து இடங்களும்  பாதிக்கப்பட்டுள்ளன. இருப்பினும் ஆளும் அதிமுக தரப்பிலோ, தண்ணீர் பஞ்சமா அதெல்லாம்  இல்லை. அது வெறும் வதந்திதான் என்று கூறி சும்மா இருந்த மக்களை உசுப்பேற்றி போராட்டம் நடத்தும் அளவுக்கு தள்ளிவிட்டுவிட்டனர். 

 

இந்நிலையில் தண்ணீர் பஞ்சம் குறித்து நடிகர் சித்தார்த் ஆளுங்கட்சியைக் கடுமையாக விளாசியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது டிவிட்டர் பக்கத்தில்,  தமிழகத்தில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. மக்கள் கேஸ் சிலிண்டருக்கு காத்திருப்பது போல தண்ணீருக்காகவும் காத்திருக்கிறார்கள். தண்ணீரை மழைநீர் சேமிப்பின் மூலம் சேகரிக்க அரசுக்கு நிர்வாகம் திறன் இல்லையா? நான் சிறுவனாக இருக்கும் 1980ல் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. ஆளும் கட்சியும். எதிர்க்கட்சியும் மாற்றி மாறி குற்றம் சொல்லி வருகின்றனர். உண்மையில் அரசுக்கு நீரை சேமிக்கும் திட்டம் இல்லை.  வாட்டர் மாஃபியாக்களுக்கு உதவுவதே அதன் எண்ணம்’ என்று கடுமையாக சாடியுள்ளார். 

 

தன்னுடைய மற்றொரு பதிவில், மக்களுக்கு நாம் என்ன செய்யப்போகிறோம்? எப்படி இதை சமாளிக்க போகிறோம்? குடிநீர் கிடைக்காததின் பின்னணியை  ஆராய நீதிமன்றம் விசாரணை ஆணையத்தை அமைக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.