அரசு வாகனங்களுக்கு தீவைத்த விவசாயிகள் 

 

அரசு வாகனங்களுக்கு தீவைத்த விவசாயிகள் 

உத்திரபிரதேசத்தில் மாநில தொழில் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு கூடுதல் நிவாரணம் வழங்கக்கோரி அரசு வாகனங்களுக்கு தீவைத்தனர். 

உத்தரபிரதேச மாநிலம், உன்னாவில்,  மாநில தொழில் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு குறைந்த இழப்பீடு வழங்குவதை கண்டித்து கடந்த சில நாட்களாக ஆயிரக்கணக்கான விவசாயிகள் நடத்திய போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். விவசாயிகளின் போராட்டத்தை ஒடுக்க காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் அங்கிருந்த அரசு வாகனங்களை தாக்கி தீ வைத்தனர்.

Fire

இதனால் போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பிய விவசாயிகள், போலீசார் மீது, தாக்குதல் நடத்தினர். இதனால் விவசாய நிலம் போர்களமானது. தொடர்ந்து தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்த காவல்துறையினர் 5 பேரை கைது செய்தனர். மேலும் 200க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

உத்தரபிரதேச மாநில அரசு, கங்கை நீர் திட்டத்திற்காக, விவசாயிகளிடமிருந்து நிலங்களை கையகப்படுத்தியது குறிப்பிடதக்கது.