அரசு மற்றும் தனியார் பள்ளிகளை ஒப்படைக்க வேண்டும்- சென்னை மாநகராட்சி

 

அரசு மற்றும் தனியார் பள்ளிகளை ஒப்படைக்க வேண்டும்- சென்னை மாநகராட்சி

தமிழகத்தில் நேற்று 161 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் சென்னையைச் சேர்ந்தவர்கள் 138 பேர். ஒட்டுமொத்த அளவில் 2,323பேருக்கு தமிழகத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 189 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

school

இந்நிலையில் சென்னையில் கொரோனா தடுப்பு பணிகளுக்காக மே.2 ஆம் தேதி வரை அரசு மற்றும் தனியார் பள்ளிகளை ஒப்படைக்க வேண்டும் என சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. கொரோனா தடுப்பு பணிகளுக்காக  திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்ட கல்வி மாவட்டங்களில் உள்ள பள்ளிகளை தயார் நிலையில் வைத்திருக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி& பேரிடர் மீட்பு துறை கேட்டுக் கொண்டதற்கு இணங்க இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. சென்னையை ஒட்டி உள்ள அண்டை மாவட்டங்களை சார்ந்த கல்வி மாவட்டங்களில் உள்ள பள்ளிகள் இதில் அடங்கும் என்றும் சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கான படுக்கை வசதி இந்த பள்ளிகளில் ஏற்படுத்த திட்டமிட்டிருப்பதாக சென்னை மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்.