அரசு மருத்துவர்கள் வேலை நிறுத்த போராட்டம்: தோல்வியில் முடிந்த பேச்சு வார்த்தை..!

 

அரசு மருத்துவர்கள் வேலை நிறுத்த போராட்டம்: தோல்வியில் முடிந்த பேச்சு வார்த்தை..!

ஊதிய உயர்வு உள்ளிட்ட நான்கு கோரிக்கைகளை வலியுறுத்திக் கடந்த ஆகஸ்ட் மாதம் வேலை அரசு மருத்துவர்கள் நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஊதிய உயர்வு உள்ளிட்ட நான்கு கோரிக்கைகளை வலியுறுத்திக் கடந்த ஆகஸ்ட் மாதம் வேலை அரசு மருத்துவர்கள் நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட வேண்டாம், உங்கள் கோரிக்கைகளை ஒரு மாத காலத்திற்குள் நிறைவேற்றித் தருகிறோம் என்று அமைச்சர் விஜய பாஸ்கர் கொடுத்த வாக்குறுதியின் பேரில் அரசு மருத்துவர்கள் போராட்டத்தைக் கைவிட்டனர். அமைச்சர் வாக்குறுதி கொடுத்து 2 மாதங்களுக்கு மேல் ஆகியும், இன்னும் எந்த கோரிக்கையும் அரசு நிறைவேற்றப் படவில்லை.

Beela Rajesh

அரசு மருத்துவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப் படாததால் இன்று தமிழகம் முழுவதிலும் உள்ள அரசு மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனையடுத்து, அரசு சார்பில் சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ் அரசு மருத்துவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு இல்லாததால் போராட்டம் தொடரும் என்று அரசு மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.