அரசு மருத்துவர்கள் போராட்டம்: தமிழக அரசு பேச்சுவார்த்தை!

 

அரசு மருத்துவர்கள் போராட்டம்: தமிழக அரசு பேச்சுவார்த்தை!

ஊதிய உயர்வுடன் உள்ளிட்ட நான்கு அம்ச கோரிக்கையை முன்வைத்து போராட்டத்திலுள்ள மருத்துவர்களுடன் தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. 

 சென்னை : ஊதிய உயர்வுடன் உள்ளிட்ட நான்கு அம்ச கோரிக்கையை முன்வைத்து போராட்டத்திலுள்ள மருத்துவர்களுடன் தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. 

மருத்துவ மேற்படிப்புகளில் இட ஒதுக்கீடு, ஊதிய உயர்வு  உள்ளிட்ட சில கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி அரசு மருத்துவர்களில் ஒரு பகுதியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  சென்னை மருத்துவக் கல்லூரியில் நடைபெற்று வரும் போராட்டத்தினால் நோயாளிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

DOCTOR

இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசு மருத்துவர்களுடன் தமிழக அரசு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. தலைமைச் செயலகத்தில் நடைபெறும் பேச்சுவார்த்தையில் மருத்துவர்களுடன் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், மருத்துவக் கல்வி இயக்குநர், சுகாதார இயக்குநர் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

TN

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள திமுக தலைவர் முக ஸ்டாலின், மக்களின் தேவை கருதியும், மக்களுக்கு ஆற்ற வேண்டிய மருத்துவப் பணியின் அவசர முக்கியத்துவம் கருதியும் அரசு மருத்துவர்கள் தங்களது சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை விலக்கிக் கொள்ள வேண்டும் என்று அன்புடன் வேண்டுகிறேன்! என்று தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

இதே போல்  பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ், ஊதிய உயர்வு கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வரும்  அரசு மருத்துவர்களை அழைத்துப் பேசி கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு முன்வர வேண்டும் என்று வலியுறுத்தி  இருந்தது குறிப்பிடத்தக்கது.