அரசு மருத்துவர்களுக்கு விடுமுறை கொடுக்காதீர்கள் : சுகாதாரத் துறை சுற்றறிக்கை..!

 

அரசு மருத்துவர்களுக்கு விடுமுறை கொடுக்காதீர்கள் : சுகாதாரத் துறை சுற்றறிக்கை..!

சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாகக் கோரி ஒப்புதல் அளித்ததால் போராட்டத்தை வாபஸ் செய்தனர். 

தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் அரசு மருத்துவர்களுக்குக் காலம் சார்ந்த பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து அரசு மருத்துவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாகக் கடந்த மாதம் தெரிவித்தனர். அதனையடுத்து, சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாகக் கோரி ஒப்புதல் அளித்ததால் போராட்டத்தை வாபஸ் செய்தனர். 

அரசு மருத்துவர்கள்

அமைச்சர் கூறிய படி, இன்னும் அவர்களது கோரிக்கையை நிறைவேற்றாததால் வரும் 25 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அரசு மருத்துவர்கள் அறிவித்ததையடுத்து, அதனைத் தடுக்கும் முயற்சியில் அரசு ஈடுபட்டுள்ளது. அதன் படி, அரசு மருத்துவர்களுக்கு இந்த மாதம் இறுதி வரை விடுமுறை  வழங்கக் கூடாது என்றும் முன் கூட்டியே அறிவிப்பு இல்லாமல் விடுமுறை  எடுப்பவர்கள் மீதி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அனைத்து அரசு மருத்துவமனை இயக்குநர்களுக்கும் சுற்றறிக்கை சுகாதாரத் துறை அனுப்பியுள்ளது.