அரசு மருத்துவமனைக்குள் புகுந்த வெள்ளம் : கயிறு கட்டி நோயாளிகள் மீட்பு !

 

அரசு மருத்துவமனைக்குள் புகுந்த வெள்ளம் : கயிறு கட்டி நோயாளிகள் மீட்பு !

சாலையில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடிக் குடியிருப்பு பகுதிகளில் நீர் புகுந்து மக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

தமிழகத்தில் பருவ மழை தாக்கத்தின் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால், சாலையில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடிக் குடியிருப்பு பகுதிகளில் நீர் புகுந்து மக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்திலும் நேற்று இரவு முதல் பெய்த கனமழையால் கல்லாறு மற்றும் கால்வாய்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அம்மாவட்டத்தில் உள்ள குடியிருப்பு பகுதிகள் வெள்ளத்தால் மூழ்கடிக்கப்பட்டு மக்கள் வீடுகளின்றி தவித்து வருகின்றனர். அதுமட்டுமின்றி மழையால் விளைநிலங்களும் முற்றிலுமாக சேதமடைந்துள்ளன. 

tt n

இந்நிலையில், பெரம்பலூர் மாவட்டம் கிருஷ்ணாபுரத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் வெள்ளநீர் புகுந்துள்ளது.

ttt

அதனால், நோயாளிகள் இருக்க இடமின்றி தவித்துள்ளனர். இது குறித்துத் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் அளிக்கப்பட்டு, மருத்துவமனைக்கு விரைந்த சென்ற தீயணைப்புத் துறையினர் நோயாளிகளைக் கயிறு கட்டி பத்திரமாக மருத்துவமனையிலிருந்து வெளியேற்றினர். அதன் பின்னர், அந்த நோயாளிகள் அனைவரும் பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.