அரசு மருத்துவமனைகளில் பாதுகாப்பு உபகரணங்கள் பற்றாக்குறை… கனிமொழி எம்.பி வேண்டுகோள்

அரசு மருத்துவமனைகளில் பாதுகாப்பு உபகரணங்கள் பற்றாக்குறை… கனிமொழி எம்.பி வேண்டுகோள்

தமிழக அரசு மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள், கொரோனா அச்சம் உள்ளவர்களுக்கு சிகிச்சை மற்றும் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால், மருத்துவர்களுக்குத் தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது. ஆனால், எல்லாம் சரியாக உள்ளது போலவே தமிழக அரசு கூறி வரும் நிலையில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

அரசு மருத்துவமனைகளில் கையுறை, மாஸ்க் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் பற்றாக்குறை உள்ளது என்று தி.மு.க எம்.பி கனிமொழி தெரிவித்துள்ளார்.
தமிழக அரசு மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள், கொரோனா அச்சம் உள்ளவர்களுக்கு சிகிச்சை மற்றும் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால், மருத்துவர்களுக்குத் தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது. ஆனால், எல்லாம் சரியாக உள்ளது போலவே தமிழக அரசு கூறி வரும் நிலையில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

இந்த நிலையில் தி.மு.க எம்.பி கனிமொழி இந்த பற்றாக்குறைகளை உடனடியாக தீர்க்க வேண்டும் என்று கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்வீட் பதிவில், “அரசு மருத்துவர்களுக்கு பாதுகாப்பு கவசம், கையுறை, முகமூடிகள் போன்ற பாதுகாப்பு உபகரணங்கள் பற்றாக்குறையாக  இருக்கிறது என்ற செய்தி வருகிறது.

தமிழக அரசு இந்தப் பற்றாக்குறையை போக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்களைக் காக்கும் சேவையில் மருத்துவர்கள், செவிலியர்கள் ஈடுபட்டிருக்கும் வேளையில், அவர்களுக்குத் தேவையான பாதுகாப்பு உபகரணங்களை தங்கு தடையின்றி தேவையான அளவு கிடைக்கச் செய்வது அரசின் தலையாய கடமை” என்று கூறியுள்ளார்.