அரசு மட்டும்தான் அருள் செய்ய வேண்டுமா? – வைரமுத்து எதிர்ப்பு

 

அரசு மட்டும்தான் அருள் செய்ய வேண்டுமா? – வைரமுத்து எதிர்ப்பு

தமிழகத்தில் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பொது மக்கள், சமூக ஆர்வலர்கள் தாங்களாக உதவிகள் வழங்கக் கூடாது என்று தமிழக அரசு கூறியிருப்பதற்கு வைரமுத்து எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பொது மக்கள், சமூக ஆர்வலர்கள் தாங்களாக உதவிகள் வழங்கக் கூடாது என்று தமிழக அரசு கூறியிருப்பதற்கு வைரமுத்து எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் திடீரென்று ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் ஏழைகள், கூலித் தொழிலாளர்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர். வெளிமாநில தொழிலாளர்கள் தங்க, சாப்பிட வழியின்றி, சொந்த ஊருக்கு திரும்ப முடியாத நிலையில் அவதிப்பட்டு வருகின்றனர். இவர்களுக்கு அரசு உதவிகள் வழங்கும் என்று அறிவித்தது. சில இடங்களில் உதவிகள் வழங்கியது. ஆனால், அது மாநிலம் முழுக்க உள்ள மக்களை சென்று சேரவில்லை.

helps-poor-78

இதனால், அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள், சமூக ஆர்வலர்கள் உணவு, உணவுப் பொருட்கள் உள்ளிட்டவற்றை வழங்கி வருகின்றனர். இவர்கள் உதவி செய்வதால் கொரோனா பரவும் என்று தமிழக அரசு புதிதாக குண்டை தூக்கிப் போட்டது.
மேலும் மக்களுக்கு உதவுவதை தடுக்கவில்லை, ஆனால் இதை அரசு மூலமாக மட்டுமே செய்ய வேண்டும். உணவுப் பொருட்களை அரசிடம் வழங்கிவிட்டால் அரசே விநியோகிக்கும் என்றது தமிழக அரசு.
தமிழக அரசு நிவாரண உதவியை வழங்கவில்லை என்பதால்தான் மக்கள் மனிதாபிமான அடிப்படையில் உதவ வந்தனர். அரசு உதவியிருந்தால் இப்படி சமூக ஆர்வலர்கள் வெளியே வர வேண்டிய தேவையே இருக்காது. மேலும், பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் அரசாங்கத்தாலேயே உதவிகள் செய்ய முடியும் என்றால் இதுநாள் வரை மக்களுக்கு வழங்காதது ஏன் என்ற கேள்வியும் எழுகிறது.

இந்த நிலையில் அரசின் நிலைப்பாட்டுக்கு கவிஞர் வைரமுத்து கண்டனம் தெரிவித்து ட்வீட் பதிவு வெளியிட்டுள்ளார். அதில், “அரசு மட்டும்தான் 
அருள் செய்ய வேண்டுமென்றால்
அறமென்பதெதற்காக?
ஆணிவேர் மட்டும்தான் 
நீர் வழங்க வேண்டுமென்றால்
பக்க வேர்கள் எதற்காக?” என்று கூறியுள்ளார்