அரசு பொதுத் தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்களின் வீடுகளுக்கே சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தும் தமிழராசிரியை!

 

அரசு பொதுத் தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்களின் வீடுகளுக்கே சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தும் தமிழராசிரியை!

கள்ளக்குறிச்சி குதிரைச்சந்தல் அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழாசிரியையாக பணியாற்றி வருபவர் துரை.மணிமேகலை. தன்னுடைய ஒரு வயது குழந்தையுடன் தன்னுடைய பள்ளியில் படிக்கும் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களின் வீடுகளுக்குச் சென்று அவர்களின் பெற்றோரிடம் பேசி வருகிறார். 

கள்ளக்குறிச்சியில் பிளஸ் 1, 2 அரசு பொதுத் தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்களின் வீடுகளுக்கே சென்று அவர்களின் பெற்றோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திவரும் தமிழாசிரியைக்குப் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
கள்ளக்குறிச்சி குதிரைச்சந்தல் அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழாசிரியையாக பணியாற்றி வருபவர் துரை.மணிமேகலை. தன்னுடைய ஒரு வயது குழந்தையுடன் தன்னுடைய பள்ளியில் படிக்கும் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களின் வீடுகளுக்குச் சென்று அவர்களின் பெற்றோரிடம் பேசி வருகிறார். 

school-students-90

இந்த பகுதியில் அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் பெரும்பாலானவர்கள் பொருளாதார ரீதியில் பின் தங்கியவர்கள். இவர்கள் தங்கள் பிள்ளைகளைத் தேர்வுக்குத் தயார் செய்வதைக் காட்டிலும் ஓய்வு நேரங்களில் வேறு வேலைக்கு அனுப்பிவிடுகின்றனர். இதனால் பள்ளியில் நடைபெறும் சிறப்பு வகுப்புகளுக்குப் பலரும் வருவது இல்லை என்று கூறப்படுகிறது. இதனால் தன்னுடைய ஒரு வயது குழந்தையுடன் ஆசிரியை மணிமேகலை மாணவர்களின் வீடுகளுக்குச் சென்று அவர்களின் பெற்றோரிடம் பேசி வருகிறார்.
இது குறித்து அவரிடம் கேட்டபோது, “பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுகள் முடிந்துவிட்டன. இதையடுத்து பெரும்பாலான மாணவர்கள் பள்ளிகளில் நடக்கும் சிறப்பு வகுப்புகளுக்கு வருவது குறைந்துவிட்டது. மாணவர்களைக் குறைகூற முடியாது. அவர்களின் வாழ்க்கை சூழல் எனக்குத் தெரியும்.
பெற்றோர்கள் வேலைக்கு சென்றுவிடுகின்றனர். பிள்ளைகளை கவனிக்க முடியாத நிலையில் அவர்கள் உள்ளனர். மாணவிகளுக்கு வீட்டு வேலை வேறு… இதனால் பரிட்சைக்கு மட்டும் போனால் போதும் என்று வீட்டிலேயே தங்க வைத்துவிடுகின்றனர். ஏன் வரவில்லை என்று மாணவ மாணவிகளிடம் கேட்டபோது பெரும்பாலான மாணவர்கள் நீங்கள் வந்து பேசுங்கள் அப்போதுதான் எங்களை படிக்க அனுப்புவார்கள் என்று மாணவர்கள் கூறினர்.

tn-exam

இதனால், நானே தனிப்பட்ட முறையில் மாணவர்களின் பெற்றோர்களை சந்தித்து பேசி வருகிறேன். இதற்கு நல்ல பலனும் கிடைத்துள்ளது. மாணவர்களுக்கு மிக முக்கியமான காலகட்டம் இது. தேர்வுக்கு அவர்களை படிக்க விடுங்கள்… அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்யுங்கள். இதில் பெறக்கூடிய மதிப்பெண் அடிப்படையில் நல்ல வாய்ப்பு கிடைக்கும் என்று கூறி அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறேன். நான் சென்று வந்த பிறகு பள்ளிக்கு சிறப்பு வகுப்புகளுக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது” என்றார்.
ஆசிரியை தன்னுடைய ஒரு வயது குழந்தையுடன் மாணவர்களின் வீடுகளுக்கு சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவது வரவேற்பைப் பெற்றுள்ளது. பலரும் ஆசிரியை துரை.மணிமேகலையின் இந்த செயலை பாராட்டி வருகின்றனர்