அரசு பேருந்தில் ஒளிபரப்பான பேட்ட திரைப்படம்: அதிர்ச்சியில் படக்குழு; கடுப்பான நடிகர் விஷால்

 

அரசு பேருந்தில் ஒளிபரப்பான பேட்ட  திரைப்படம்: அதிர்ச்சியில் படக்குழு; கடுப்பான நடிகர் விஷால்

அரசுப் பேருந்தில் சட்ட விரோதமாக ரஜினிகாந்த நடித்த பேட்ட படத்தை ஒளிபரப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை: அரசுப் பேருந்தில் சட்ட விரோதமாக ரஜினிகாந்த நடித்த பேட்ட படத்தை ஒளிபரப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சன் பிக்சர் தயாரிப்பில், கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருக்கும் பேட்ட திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது. அதில் நடிகர் விஜய் சேதுபதி, சிம்ரன், சசிகுமார், த்ரிஷா, நவாசுதீன் சித்திக்  உள்ளிட்ட திரை நட்சத்திரங்கள் பலர் நடித்துள்ளனர். 80களில்  இருந்த ரஜினியை மீண்டும் திரையில் கண்ட அனுபவம், உண்மையிலேயே ரஜினி ரசிகர்களுக்குப் பொங்கல் விருந்தாக அமைந்துள்ளது.

இந்நிலையில் கரூரில் இருந்து சென்னை வந்த  அரசுப் பேருந்தில் சட்ட விரோதமாக பேட்ட படத்தை ஒளிபரப்பியதாக வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இதனை ரசிகர் ஒருவர் வீடியோவாக எடுத்து பேருந்தின் எண், வழித்தடம் உள்ளிட்ட தகவல்களோடு சமூக வலைதளங்களில் பதிவேற்றியுள்ளார். 

இந்த தகவலை தனது டிவிட்டர் பக்கத்தில் ரீட்விட் செய்திருக்கும் நடிகரும், தயாரிப்பாளர் சங்கத் தலைவருமான விஷால் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். பேட்ட படத்தை  அரசு பேருந்தில் ஒளிபரப்பியது படக்குழுவினர் மத்தியில் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.