அரசு பஸ்களில் போலீஸும் டிக்கெட் எடுக்கணுமா? ஆர்.டி.ஐ. மூலமாக வெளியான அதிர்ச்சி தகவல்!

அரசு பஸ்களில் போலீஸும் டிக்கெட் எடுக்கணுமா? ஆர்.டி.ஐ. மூலமாக வெளியான அதிர்ச்சி தகவல்!

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் அரசுப் பேருந்தில் ஏறிய தலைமைக் காவலர் ஒருவர், டிக்கெட் எடுக்க மறுத்து நடத்துநருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.  இதன் காரணமாக மன அழுத்தத்திற்கு ஆளான ஓட்டுநர் கோபிநாத் மாரடைப்பு ஏற்பட்டு பேருந்திலேயே உயிரிழந்தார். இந்தச் செய்தியை நமது டாப் தமிழ் நியூஸ் சில தினங்களுக்கு முன்பாக வெளியிட்டிருந்தது. 

bus

இந்த செய்தி ஏற்படுத்திய அதிர்வலைகளால், ஈரோட்டைச் சேர்ந்த சுப்பிரமணியம் என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ், காவலர்களாக பணிபுரிபவர்கள் அரசுப் பேருந்துகளில் இலவசமாக பயணிக்க அனுமதி உள்ளதா? என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
 தமிழ்நாடு காவல் துறையில் பணிபுரியும் காவலர்கள் பணி நிமித்தமாக இல்லாமல் சொந்தத் தேவைக்காக அரசுப் பேருந்துகளில் பயணம் செய்யும் போது கட்டாயமாக பயணச்சீட்டினை வாங்க வேண்டும் என பதில் அளித்துள்ளார் காவல்துறை பணியமைப்புக்கான தலைவர்.

ticket

பணி நிமித்தமாக அனுமதி பெற்று அரசுப் பேருந்தில் பயணித்தால் பயணச்சீட்டு பெறத் தேவையில்லை என்றும் தெரிவித்திருக்கிறார்.