அரசு பள்ளியில் ஏசி வகுப்பறை! ஆசிரியர்களின் அசத்தல் சாதனை!

 

அரசு பள்ளியில் ஏசி வகுப்பறை! ஆசிரியர்களின் அசத்தல் சாதனை!

தமிழகத்தில்  இப்போது ஏசி வகுப்பறைகள் என்பது இப்போது மிக சாதாரணமாகிவிட்டது. குறிப்பாக நாமக்கல் ,திருப்பூர்
மாவட்டங்களில் இருக்கும்.’ பிராய்லர் ‘ பள்ளிகூடங்களில் எப்பவோ ஏசி வசதிகள் வந்துவிட்டன.

தமிழகத்தில்  இப்போது ஏசி வகுப்பறைகள் என்பது இப்போது மிக சாதாரணமாகிவிட்டது. குறிப்பாக நாமக்கல் ,திருப்பூர்
மாவட்டங்களில் இருக்கும்.’ பிராய்லர் ‘ பள்ளிகூடங்களில் எப்பவோ ஏசி வசதிகள் வந்துவிட்டன.

ஆனால்,இது அப்படிப்பட்ட பள்ளியல்ல.ஏழை நெசவு தொழிலாளர் பிள்ளைகளும்,வரண்ட நிலத்தில் போராடும் ஏழைகளின் பிள்ளைகழும் படிக்கும் அரசுப்பள்ளி.இதை நிகழ்த்தி காட்டி இருப்பவர்கள் கோடீசுவரத் தொழிலதிபர்களல்ல… அதே பள்ளியில் பணியாற்றும் தாயுள்ளம் கொண்ட ஆசிரிய பெருமக்கள்!

ஏசி வசதிகள்

திருப்பூர் ஈரோடு மாவட்ட எல்லையில் முத்தூரை அடுத்திருக்கும் மு.வேலாயுதம் பாளையம் கிராமத்தில்தான் இந்த அதிசய சம்பவம் நடந்திருக்கிறது.
1966-ல் தொடங்கப்பட்ட இந்த பள்ளி 2008-ல் நடுநிலை பள்ளியாகி, இப்போது பொன்விழா ஆண்டைக்கடந்து விட்டது. ஆனால் மழை பொய்த்துப் போனதால்,பலரும் திருப்பூர் பனியன் கம்பெனிக்கும், கட்டிட வேலைக்கும் போய்விட , குடியிருப்போர் எண்ணிக்கை குறைந்து இப்போது மொத்தமே 42 பிள்ளைகள் மட்டுமே படிக்கிறார்கள்.

அருகில் நெசவாளர் காலணியில் 80 வீடுகள் வந்ததும் பள்ளி மாணவர் எண்ணிக்கையை கூட்ட முடிவு செய்தது தலைமை ஆசிரியர் எஸ்.வின்செண்ட் தலைமையிலான ஆசிரியர் குழு. ஆசிரியர்கள் கோகிலவாணி,ரெஜினா பேகம்,சத்யா,மனோகரன், சண்முகசுந்தரம் ஆகியோர் சேர்ந்து ரூபாய் ஒரு லட்சம் செலவில் ஏசி வகுப்பறை உருவாக்கியிருக்கிறார்கள்.

கணினி ஸ்மார்ட் வகுப்பறை

அதில் 1 முதல் 5-ம் வகுப்புவரை உள்ள குழந்தைகள் படிக்கின்றனர்.6,7,8 ம் வகுப்பு குழந்தைகளுக்கு கணினி ஸ்மார்ட் வகுப்பறை உருவாக்கியுள்ளனர். இதனால் கவரப்பட்டு நெசவாளர் காலனியில் உள்ள குழந்தைகள் இங்கே வரத்துவங்கி உள்ளனர்.ஆனால்,அங்கிருந்து மு.வேலாயுதம்பாளையம் வர பேருந்து வசதியில்லை.

இதையறிந்த ஆசிரியர்கள் அதற்கும் மாற்று ஏற்பாடு செய்து இருக்கிறார்கள். மாதம் ஒரு தொகை பேசி நெசவாளர் காலணி குழந்தைகள் வந்துபோக அவர்களே ஒரு ஆட்டோ ஏற்பாடு செய்து இருக்கிறார்கள்.

கல்விச்சுற்றுலா,கராத்தே வகுப்புகள்,கராத்தே,யோகா பயிற்சி, குடிநீர், கழிப்பறை வசதி என்று எல்லா வசதிகளும் செய்து தந்து பள்ளியை வெற்றிகரமாக நடத்தும் இந்த ஆசிரியர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.