அரசு பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை சரிவு: கல்வித்துறை அதிர்ச்சி தகவல்

 

அரசு பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை சரிவு: கல்வித்துறை அதிர்ச்சி தகவல்

சென்னை: அரசு பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்துள்ளதாக கல்வித்துறை அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை சேர்க்கவில்லை என கூறப்படுகிறது. அரசு பள்ளிகள் தரமாக இல்லை எனவே அதில் தங்கள் பிள்ளைகளை சேர்ப்பதற்கு பெற்றோர்கள் விரும்புவதில்லை எனவும்  கூறப்படுகிறது. இந்நிலையில், 10 ஆண்டுகளுக்கு முன் அரசு பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை 1 கோடியாக இருந்ததாக கூறப்பட்டது. இதனையடுத்து, 4 ஆண்டுகளுக்கு முன் 56 லட்சமாக குறைந்த மாணவர்களின் எண்ணிக்கை தற்போது 46 லட்சமாக குறைந்துள்ளதாக கல்வித்துறை அறிவித்துள்ளது.

மேலும், மொத்த அரசு பள்ளிகளில் 15 முதல் 100 மாணவர்கள் மட்டுமே உள்ள பள்ளிகள் 75% இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.மொத்த பள்ளிகளின் எண்ணிக்கை 21, 378 -ஆக உள்ளது எனவும் 4 அரசு பள்ளிகளில் மட்டுமே 1000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயில்கின்றனர்.  900 அரசு பள்ளிகளில் 10-க்கும் குறைவான மாணவர்கள் பயில்கின்றனர் என அறிவித்து கல்வித்துறை அதிர்ச்சியை கிளப்பியுள்ளது. அதேசமயம் 10 ஆண்டுகளுக்கு முன்பு மிக குறைவாக இருந்த மெட்ரிக் பள்ளிகளின் எண்ணிக்கை தற்போது 15,000-ஆக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.