அரசு பள்ளிகளில் பாலுக்கு பதிலாக உப்பைக் கொடுக்கும் அவலம் | வெளியான பகீர் தகவல்

 

அரசு பள்ளிகளில் பாலுக்கு பதிலாக உப்பைக் கொடுக்கும் அவலம் | வெளியான பகீர் தகவல்

நம்ம தமிழ்நாட்டில் தான் அரசு பள்ளிகளில் நடக்கின்ற அவலங்களை கேள்வி கேட்க ஆளில்லை என்று பார்த்தால், நாடு முழுவதுமே அரசாங்க அதிகாரிகள் இப்படி தான் இருப்பார்கள் போல என்று எண்ண வைத்திருக்கிறது உத்திரபிரதேச மாநிலத்தில் நடைபெறும் கூத்துகள்.

உத்திர பிரதேசத்தில் மிசாபூர் நகரத்தில் இருக்கும் அரசாங்க பள்ளிக்கூடத்தில் மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவில் ரொட்டிக்கு கூடவே கொடுக்கப்படும் பாலுக்கு பதிலாக வெறும் உப்பை வழங்கி வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பான புகைப்படம் மற்றும் வீடியோ ஒன்றும் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானது.

இந்த வீடியோவை எடுத்த பத்திரிகையாளர் மீது அம்மாநில அரசு, `உத்தரப்பிரதேச அரசின் மீது அவதூறு பரப்பும் வகையில் பத்திரிகையாளர் செயல்பட்டுள்ளார்’ வழக்கு பதிவு செய்துள்ள கொடுமையும் நிகழ்ந்துள்ளது.  வீடியோ எடுத்த பத்திரிகையாளருக்கு எதிராகப் பதிவு செய்யபட்டுள்ள எஃப்.ஐ.ஆரில், `உள்ளூர் பத்திரிகையில் வேலைப் பார்க்கும் நிருபர் அந்த வீடியோவை ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்துக்கு அனுப்பி, அது சமூக வலைதளங்களில் பரவியிருக்கிறது. இது மாநில அரசு மீதான அவதூறு பரப்பும் முயற்சி’ என்று குறிப்பிடப்பட்டிருக்குது.

கூடவே “நாங்கள் இது தொடர்பா விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளோம். ஒருவேளை மாணவர்களுக்கு ரொட்டியுடன் சேர்ந்து சாப்பிட உப்பு வழங்கியிருப்பது உறுதியாகும் பட்சத்தில், பள்ளியின் தலைமையாசிரியர், கிராம பஞ்சாயத்து தலைவர் உள்ளிட்டோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், சம்பந்தபட்டவர்கள் இடைநீக்கம் செய்யபடுவார்கள்” என்று உயர் அதிகாரி ஒருவர் என்டிடிவி செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருக்கார்.

ஆனாலும், “இங்கிருக்கும் உணவுகள் மோசமாகத்தான் இருக்கின்றன. சிலசமயங்களில் மாணவர்களுக்கு ரொட்டி மற்றும் உப்பு வழங்கப்படுகிறது. அதேபோல அரசியுடன் சேர்ந்து உப்பைக் கொடுத்து மாணவர்களை உண்ணச் சொல்கின்றனர். எப்போதாவது தான் பால் கொடுக்கப்படுகிறது. மற்றபடி, வேறு எதுவும் வழங்கப்படுவதில்லை. வாழைப்பழங்கள் ஒருபோதும் கொடுப்பதில்லை. கடந்த ஓராண்டாக இதே நிலை தான் நீடித்து வருகிறது” என்று பெற்றோர்கள் சொல்லி வருகிறார்கள்.