அரசு கேபிள் டிவி கட்டணத்தை குறைத்தது தமிழக அரசு! இனி ரூ.130 மட்டுமே 

 

அரசு கேபிள் டிவி கட்டணத்தை குறைத்தது தமிழக அரசு! இனி ரூ.130 மட்டுமே 

மக்களின் கோரிக்கையை ஏற்று அரசு கேபிள் டிவி கட்டணம் ரூ.130 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

மக்களின் கோரிக்கையை ஏற்று அரசு கேபிள் டிவி கட்டணம் ரூ.130 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு தொலைக்காட்சி சேனல்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தன. ஏழை எளிய மக்கள் வசதிக்காக, குறைந்த கட்டணத்தில் கேபிள் இணைப்புகளை கொடுக்கும் விதமாக அரசு கேபிள் டிவி நிறுவனத்தை ஜெயலலிதா தொடங்கி வைத்தார். அதன் பிறகு பல்வேறு சேனல்கள் ஒலிபரப்பாகி கொண்டிருக்கின்றன. 

கேபிள் டி.வி. ஒளிபரப்பில் கடுமையான போட்டி நிலவுகிறது. தமிழகத்தில் 50-க்கும் மேற்பட்டோர் ‘டிஜிட்டல்’ லைசென்சு பெற்று தொழில் செய்து வருகிறார்கள். இந்த போட்டியை சமாளிப்பதற்காகவும் அனைத்து சேனல்களும் மக்களுக்கு குறைந்த விலையில் சென்றடைய வேண்டும் என்பதற்காகவும், கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் நலன் காக்கப்பட வேண்டும் என்பதற்காகவும் அரசு கேபிள் டி.வி. நிறுவனம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்நிலையில் கேபிள் டி.வி. கட்டணம் விரைவில் குறைக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. 

மக்களின் கோரிக்கையை ஏற்று அரசு கேபிள் டிவி கட்டணம் ரூ.130 ஆக குறைக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 10 ஆம் தேதி முதல் ரூ.130 + ஜிஎஸ்டி என்ற மாத சந்தா கட்டணம் நிர்ணயிக்கப்படும். வேலூர் மாவட்டம் நீங்கலாக ஆக.10 முதல் புதிய கட்டணம் அமலுக்கு வரும் என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.