அரசு கட்டிடங்கள் எல்லாம் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் நிறத்துக்கு மாற்றம்… உள்ளாட்சித் தேர்தல் நியாயமாக நடக்குமா? – தெலுங்கு தேசம் சந்தேகம்

 

அரசு கட்டிடங்கள் எல்லாம் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் நிறத்துக்கு மாற்றம்… உள்ளாட்சித் தேர்தல் நியாயமாக நடக்குமா? – தெலுங்கு தேசம் சந்தேகம்

ஆந்திரப் பிரதேச மாநில தேர்தல் ஆணையர் ரமேஷ் குமாருக்கு தெலுங்கு தேசம் கட்சியின் மாநிலத் தலைவர் கால வெங்கட் ராவ் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
“உள்ளாட்சித் தேர்தலை நியாயமாக நடைபெறுவதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. கிராம பஞ்சாயத்துக் கட்டடங்கள், சாலைகள், வகுப்பறைகள், அரசுக் கட்டடங்கள் ஆகியவற்றில் ஆளுங்கட்சியான ஒய்.எஸ்.ஆர் காங்கிரசின் கட்சிக்கொடி வண்ணம் பூசப்படுகிறது

ஆந்திராவில் உள்ள அரசு கட்டிடங்களுக்கு எல்லாம் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் வண்ணம் பூசப்பட்டு வரும் நிலையில் அங்கு உள்ளாட்சித் தேர்தல் நியாயமாக நடைபெறுமா என்று தெலுங்கு சேதம் கேள்வி எழுப்பியுள்ளது.

chandrababu-naidu

இது குறித்து ஆந்திரப் பிரதேச மாநில தேர்தல் ஆணையர் ரமேஷ் குமாருக்கு தெலுங்கு தேசம் கட்சியின் மாநிலத் தலைவர் கால வெங்கட் ராவ் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
“உள்ளாட்சித் தேர்தலை நியாயமாக நடைபெறுவதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. கிராம பஞ்சாயத்துக் கட்டடங்கள், சாலைகள், வகுப்பறைகள், அரசுக் கட்டடங்கள் ஆகியவற்றில் ஆளுங்கட்சியான ஒய்.எஸ்.ஆர் காங்கிரசின் கட்சிக்கொடி வண்ணம் பூசப்படுகிறது. சில பகுதிகளில் அக்கட்சியின் கட்சிக் கொடியான மின்விசிறியும் வரையப்பட்டுள்ளது. உள்ளாட்சித் தேர்தலை நடத்துவது தொடர்பாக 2019ம் ஆண்டு மாநில தேர்தல் ஆணையம் சில வழிகாட்டுதல்களை வகுத்தது. எந்த ஒரு வேட்பாளரும் தங்கள் கட்சி சின்னங்களை, தனியார் மற்றும் அரசு சுவர்களில் வரையக் கூடாது என்று கூறப்பட்டுள்ளது. இந்த வழிகாட்டுதல்களுக்கு முற்றிலும் எதிராகத் தற்போது நடந்துவருகிறது. ஜனநாயகத்தின் விழுமியங்களைக் காப்பாற்றும் வகையில், உள்ளாட்சித் தேர்தல் நியாயமாக நடத்த வழிவகை செய்ய வேண்டும்.

ysr-colour

பொதுமக்களிடையே நம்பிக்கையை மீட்டெடுக்கும் வகையில், அரசு சுவர்களில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சிக் கொடியின் நிற வண்ணப்பூச்சுகளைத் தடுத்துநிறுத்த வேண்டும். தேர்தலை நடத்துவதில் ஆணையம் ஒருசார்பற்ற முறையில் செயல்படுவது பொருத்தமாக இருக்கும்.ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் ஆதரவாளர்கள் உள்ளாட்சித் தேர்தல் பணிகளில் ஈடுபட வாய்ப்புள்ளது. இதனையும் தடுத்து நிறுத்த வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.

ysr-jagan

இதைத் தொடர்ந்து தெலுங்கு தேசம் கட்சித் தலைவருடன் மாநில தேர்தல் ஆணையர் பேசியதாக கூறப்படுகிறது. “உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பாக அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டி, அனைவரின் கருத்தும் கேட்கப்படும் என்று தேர்தல் ஆணையர் உறுதியளித்துள்ளார்” என்ற தெலுங்கு தேசம் மாநில தலைவர் வெங்கட் ராவ் தெரிவித்துள்ளார்.