அரசு கஜானா எம்ட்டி! சுங்கச்சாவடி கட்டணம் தொடரும்- நிதின் கட்கரி உறுதி!

 

அரசு கஜானா எம்ட்டி! சுங்கச்சாவடி கட்டணம் தொடரும்- நிதின் கட்கரி உறுதி!

மத்திய அரசிடம் பணம் இல்லை எனவே சுங்கச்சாவடி கட்டண வசூல் தொடர்ந்து அமலில் இருக்கும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி உறுதியாக கூறினார்.

தேசிய நெடுஞ்சாலைகளில் அமைந்துள்ள சுங்கச்சாவடிகளில் கார், பேருந்து மற்றும் வர்த்தக வாகனங்கள் போன்ற வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த சுங்க கட்டணம் நாடு முழுவதும் ஒரே மாதிரியாக இருப்பது இல்லை. சில பகுதிகளில் கட்டணம் அதிகமாக உள்ளது. இது பெரும் விவாதத்துக்கு உள்ளாகியுள்ளது.

நிதின் கட்கரி

இந்நிலையில், நாடாளுமன்றத்தில் சுங்கச்சாவடி தொடர்பாக சில உறுப்பினர்கள் கேள்வி எழுப்பி இருந்தனர். அதற்கு மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி நேற்று பதில் அளித்தார். மக்களவையில் அவர் கூறியதாவது: கடந்த 5 ஆண்டுகளில் 40 ஆயிரம் கி.மீட்டர் தொலைவுக்கு நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டது.

சுங்க கட்டணம் வசூல்

சுங்கச்சாவடிகளில் வசூலிக்கப்படும் பணத்தை கொண்டுதான் கிராமப்புறங்கள் மற்றும் மலை பகுதிகளில் சாலை அமைக்கப்படுகிறது. நல்ல சேவை வேண்டும் என்றால் அதற்கு பணம் கொடுக்க வேண்டும். அரசிடம் பணம் இல்லை. எனவே காலத்துக்கு தகுந்த மாதிரி சுங்க கட்டணம் மாறுமே தவிர சுங்க கட்டணம் வசூல் முறை தொடர்ந்து இருக்கும். சுங்க கட்டணம் வசூல் திட்டம் என் மூளையில் பிறந்த குழந்தை. இவ்வாறு அவர் கூறினார்.