அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு!

 

அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு!

தமிழகத்தில் அரசு  ஊழியர்களுக்குத்  தீபாவளி போனஸ் மற்றும் கருணைத் தொகையை அரசு அறிவித்துள்ளது

தமிழகத்தில் அரசு  ஊழியர்களுக்குத்  தீபாவளி போனஸ் மற்றும் கருணைத் தொகையை அரசு அறிவித்துள்ளது

தீபாவளி பண்டிகை நெருங்கி கொண்டிருக்கிறது. இதனால் மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், அரசு போக்குவரத்துக் கழகங்கள், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் ஆகிய பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு 20% போனஸ் மற்றும் கருணை தொகை வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. 

லாபம் ஈட்டியுள்ள கூட்டுறவு சங்கங்களில்  பணிபுரியும் தகுதியான ஊழியர்களுக்கு 20% போனஸ் மற்றும் கருணை தொகையும், மற்ற கூட்டுறவு சங்கங்களில்  பணிபுரியும் தகுதியான ஊழியர்களுக்கு 10% போனஸ் மற்றும் கருணை தொகை வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

diwali

தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம், சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்தில் பணிபுரியும் சி மற்றும் டி பிரிவு பணியாளர்களுக்கு 10% போனஸ் மற்றும் கருணை தொகையும், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் பணிபுரியும் சி மற்றும் டி பிரிவு பணியாளர்களுக்கு 8.33 சதவீதம் போனஸ் வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.  இதே போல் அரசு ரப்பர் கழகம், வனத்தோட்ட கழகம், தேயிலை தோட்டக் கழகம், சர்க்கரை ஆலைகள், கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம் ஆகிய நிறுவனங்களைச் சேர்ந்த பணியாளர்களுக்கு போனஸ் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு 3 லட்சத்து 48 ஆயிரத்து 503 தொழிலாளர்களுக்கு 472 கோடியே 65 லட்ச ரூபாய் போனஸ் மற்றும் கருணைத் தொகையாக வழங்கப்படும் என்றும் இதில் குறைந்தபட்சம் தொகையாக  8,400  ரூபாயும் அதிகபட்ச தொகையாக  16,800 ரூபாயும் போனஸாக வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.